புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2014

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்


இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கொ சென்று பயனில்லை
தெரிவுக்குழுவில் வந்து யோசனைகளை முன்வைக்கலாம்



தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வொன்றை காண வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். எனவே த.தே.கூ. தமது யோசனைகளை தெரிவுக் குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள் இந்திய பிரதமரை சந்தித்து பேசியது குறித்து நேற்று நடைபெற்ற ஐ.ம.சு.மு. ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
13 வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரம் வழங்க முடியாது என்பதை தேவையான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். த.தே.கூ. மோடியிடம் எத்தகைய கோரிக்கையும் முன்வைக்கலாம் ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வு ஒன்றினை காணுமாறு மோடி கூறியிருக்கிறார். இந்தியாவுக்கோ வேறு இடத்துக்கோ செல்வதை விட தெரிவுக்குழுவுக்கு வந்து தமது யோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
ஐ.ம.சு.மு. அரசும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளக நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறது. மனிதாபிமான நடவடிக்கையும் எமக்கே உரித்தான முறையில் முன்னெடுக்கப்பட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால், பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதாகக் கூறி லிபியா, ஈரான், சிரியா, எகிப்து, பலஸ்தீன் போன்ற நாடுகளில் குழப்ப நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலைத்தேய நாடுகள் கை வைத்த எந்த இடத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை நாம் எமக்கே உரிய முறையில் தீர்வு கண்டதால் எம்மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. உலகில் ஏற்கப்பட்ட முறையை விட எமது முறையை ஏற்கும் நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. இதுவரை நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடவில்லை. அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கவனம் செலுத்தலாம்.
அரசியலமைப்பு திருத்தம், ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர். 1972ம் ஆண்டு யாப்பை அடிப்படையாகக் கொண்டே 1977 ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப் பொன்றை தயாரிப்பதானால் நடைமுறையிலுள்ள யாப்பின் உதவியிலே அது தயாரிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி முறையை மாற்றுவதானால் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தையும் இணைத்தே திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
உள்நாட்டுத் தேர்தல் சட்டத்தை திருத்த பல வருடங்கள் பிடித்தது. யாப்பு திருத்தத்தை நினைத்தபடி முன்னெடுக்க இயலாது அதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் ஜனாதிபதி முறை ஒழிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளன. ஊவா தேர்தலின் பின்னர் இவ்வாறான விடயங்கள் பற்றி சுதந்திரக் கட்சி பேச்சு நடத்தும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் குறித்து ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகளுடன் ஆராயப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அமைச்சர் காமினி லொகுகேயும் இந்த ஊடக மாநாட்டில் பங்கேற்றார்.

ad

ad