புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014

சுவிசில் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கும்பாபிசேக மலர் வெளியீடு 

கடந்த ஞாயிறு 24.08.2014 அன்று மாலை 4 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் ஆரம்பமாகிய இந்த விழா மங்கள விளக்கேற்றலுடன்
கமலாம்பிகை பழைய மாணவர் சங்க தலைவர் குமாரசாமி சுரேசின் தலைமையில் தொடங்கியது . அகவணக்கம், கடவுள் துதியை தொடர்ந்து வரவேற்புரையை சிவானந்தன் நிகழ்ந்த ,பின்னர் தலைவர் உரை நடைபெற்றது . தொடர்ந்த இந்த விழாவில் சு.கருணாகரன்.நா.கணேசரத்தினம், அ.நிமலன், இ.ரவீந்திரன், சிவ​. சந்திரபாலன்,செ.சுரேஷ் ஆகியோரின் உரையை தொடர்ந்து கனடாவில் இருந்து தாயகம் சென்று இந்த கோயிலை மீள அழகுற அமைத்து உதவிய சமூக சேவையாளர் கண்ணாடி என்றழைக்கப்படும்  அ.சண்முகநாதனின் சிறப்புரை இடம்பெற்றது.அவர் தனதுரையில் முன்பகுதியில் ஆலயத்தை அமைத்த போது நிகழ்ந்த கஷ்டங்கள் பற்றியும் அதன் சிறப்பான அமைப்பு முறைகள் பற்றியும் எடுத்து விளக்கி இருந்தார்  பின்பகுதியில் எமது கிராமத்தின் தற்போதைய நிலை,இதுவரை செய்யப்பட்ட  சமூக பணிகள் இன்னும் செய்ய வேண்டியவை பற்றி  விபரமாக  குறிப்பிட்டு பேசினார்.சமூகசேவையாளர் சண்முகநாதனை புங்குடுதீவு மக்கள் விழிப் புணர்வு ஒன்றியம் சந்தன மாலை அணிவித்து  வாழ்த்துமடலை வணங்கி நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்து சிறப்பித்தது தொடர்ந்து மலர் வெளியீடும் நிகழவுற்றது .முதலாவது மலரினை வர்த்தகர் இ.ரவீந்திரன் பெற்று சிறப்பித்தார் .நன்றியுரையை சு.சண்முகநாதன் நிகழ்த்தி விழாவை இனிதே நிறைவு செய்து வைத்தார் இராபோசனமும் வழங்கபட்டது 
















கடந்த ஞாயிறு ௨௪.௦.௨௦௧௪  அன்று மாலை ௪ மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆரம்பமாகிய இந்த விழா மங்கள விளக்கேற்றலுடன் கமலாம்பிகை பழைய மாணவர் சங்க தலைவர் குமாரசாமி சுரேசின் தலைமையில் தொடங்கியது . அகவணக்கம், கடவுள் துதியை தொடர்ந்து தலைவர் உரை நடைபெற்றது . தொடர்ந்த இந்த விழாவில் சு.கருணாகரன்.நா.கணேசரத்தினம், அ.நிமலன், இ.ரவீந்திரன், சிவ​. சந்திரபாலன்,செ.சுரேஷ் ஆகிரின் உரையை தொடர்ந்து கனடாவில் இருந்து தாயகம் சென்று இந்த கோயிலை மீள அழகுற அமைத்து உதவிய சமூக சேவையாளர் கண்ணாடி என்றழைக்கப்படும்  அ.சண்முகநாதனின் சிறப்புரை இடம்பெற்றது.அவர் தனதுரையில் முன்பகுதியில் ஆலயத்தை அமைத்த போது நிகழ்ந்த கஷ்டங்கள் பற்றியும் அதன் சிறப்பான அமைப்பு முறைகள் பற்றியும் எடுத்து விளக்கி இருந்தார்  பின்பகுதியில் எமது கிராமத்தின் தற்போதைய நிலை,இதுவரை செய்யப்பட்ட  சமூக பணிகள் இன்னும் செய்ய வேண்டியவை பற்றி  விபரமாக  குறிப்பிட்டு பேசினர் .தொடர்ந்து மலர் வெளியீடும் நிகழவுற்றது .முதலாவது மலரினை வர்த்தகர் இ.ரவீந்திரன் பெற்று சிறப்பித்தார் .இராபோசனமும் வழங்கபட்டது 

ad

ad