புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014

 ராஜபட்சவுக்கு மதுரை ஆதீனம் கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை ராணுவ இணையதளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு மதுரை ஆதீனம்  சனிக்கிழமை

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காகவும், தமிழகத்தில் உள்ள மீனவச் சமுதாயத்திற்காகவும், பல்லாண்டுகளாக குரல் கொடுத்து வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மீனவர்களுக்காக பிரதமருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதியும், சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியும் அயராது உழைத்து வருபவர் நம் முதல்வர்.

நமது முதல்வருக்கு அதிகாரம் இருந்திருந்தால், உடனடியாக இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு சரியான தீர்வு கண்டு, அம்மக்கள் நிம்மதியாக வாழ வைத்திருப்பார். அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் இருப்பதால் தானே பிரதமருக்கு அவ்வப்போது நினைவுபடுத்திக் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது.

இலங்கை அரசே, அதிபர் ராஜபட்சேவே, நீங்கள் எத்தனைமுறை பிரதமருக்கு கடிதம் எழுதினாலும், என்ன குரல் கொடுத்தாலும் எங்களை எதுவும் செய்து விடமுடியாது. எங்கள் நடவடிக்கையில் தலையிடுவதங்கு எவருக்கும் இவ்வுலகில் உரிமை கிடையாது என்று  கூறும், உங்கள் ஆணவப் போக்கிற்குச் சரியான முடிவு விரைவில் கிடைக்கும். உங்கள் அட்டகாசங்களை மேலும் மேலும் பொறுத்துக் கொண்டிருப்பதால், தமிழர்களாகிய நாங்கள் கோழைகள் என்றோ, துணிவற்றவர்கள் என்றோ கருத வேண்டாம் என எச்சரிக்கிறோம், என தெரிவித்துள்ளார்.

ad

ad