புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை (செய்தித் துளிகள்)
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தெளிவாக இருப்பதுடன், அவ்வாறு பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.
இன்றைய தினம் நடைபெற்ற பொலிஸாரின் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், யாழ்.கந்தர்மடம் பகுதியில் டி.ஜ.ஜியின் பெயரை பாவித்து தெற்கில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு பணம் சேகரிப்பதாக கூறும் கும்பல் நேற்றைய தினம் மக்களிடம் பணம் வாங்கியுள்ளது.
ஆனால் அவர்களுக்கும் பொலிஸாருக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. அவ்வாறானவர்கள் மக்களுடைய வீடுகளுக்கு வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

ad

ad