புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியில் வசிக்கலாம் .வெள்ளவத்தையில் காவல்துறை கணப்பின் கீழ இருக்க வேண்டும் .கமலேந்திரனுக்கு பிணை
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்
தலைவர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் ரெக்சியனின் மனைவி அனிதா ஆகியோருக்கும் யாழ். மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.  
யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சியனின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரனுக்கு
யாழ்.உயர் நீதிமன்றம் இன்றைய தினம் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது.
மேற்படி பிரதேச சபையின் தலைவர் றெக்சியன் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி புங்குடு தீவு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தமையினை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஈ.பி.டி.பி அமைப்பின் யாழ். மாவட்ட  முன்னாள் அமைப்பாளராக இருந்த க.கமலேந்திரன் கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த வழக்கு யாழ்.உ யர் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நிபந்தனையாக அவர் யாழ்.மாவட்டத்தில் இருக்க கூடாதெனவும், கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து தொடர் பொலிஸ் காண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் சுட்டப்பட்டுள்ளது

ad

ad