புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

காங்கிரஸ் அரசைப் போல் பாஜகவை நினைக்க வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன் 
காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பாஜக கலை இலக்கிய அணி சார்பில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் குடும்ப விழா சனிக்கிழமை நடந்தது. மத்திய இணை அமைச்சரும் தமிழக பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நான் அளித்த உறுதியின் பேரில் அவர்களது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 94 மீனவர்களும் இ 63 படகுகளும் இன்னும் 10 நாட்களில் மீட்கப்படுவார்கள்.
 
மீனவர் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசியுள்ளேன். மேலும் ராமேசுவரம் மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று சுஷ்மா சுவராஜை சந்திக்கவுள்ளேன்.
 
தமிழக மீனவர்களின் நலனை காப்பதற்காக நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்படும். மேலும் கச்சதீவு விடயத்தில் சட்டசிக்கல்கள் உள்ளன. இவை எதிர்காலத்தில் களையப்படும்.
 
இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பிரதமரை பற்றி இழிவான கருத்து வெளியிடப்பட்டிருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 
 
மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் மத்திய அரசு அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இலங்கை அரசு தற்போதைய இந்திய அரசாங்கத்தை பழைய காங்கிரஸ் அரசை போல் நினைக்க வேண்டாம் என்று கூறினார்.
-

ad

ad