புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சாட்சியம்!- ஜெஹான் பெரேரா
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவிடம் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளதாக இலங்கை சிவில் சமூக ஒன்றியத்தின் பேச்சாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நீக்கப்பட்டமை மற்றும் அவரது விலகளோடு இராணுவத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
இதனால் உருவாகிய நிலைமைகளினால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சி காரணமாக பல சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத்தில் இருந்து விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினர்.
இவர்களே சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளனர். எவ்வாறான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு தமிழ் மக்களுக்காக சர்வதேச விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாகவும் ஜெஹான் பெரேரா மேலும் கூறியுள்ளார்.

ad

ad