புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

ஆண்மை பரிசோதனை... இல்லையேல் கைது: நித்யானந்தாவிற்கு செக்
நித்யானந்தாவிற்கு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் பிடதியில் உள்ள நித்யானந்த ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
பொலிசார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடத்திய விசாரணை ஒன்றில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பிடதி பொலிசார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு செய்துள்ளார்.
அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தபோது, நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தீர்ப்பு வெளியாகும் வரையில் இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சிஐடி பொலிஸ் வழக்கறிஞர், ஆண்மை பரிசோதனை செய்யும் முடிவு மனுதாரர்களின் மெத்தனம் காரணமாக காலதாமதமாகி வருகிறது என்று வாதாடியுள்ளார்.
பின்னர் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, நீதிமன்ற விசாரணைக்கு சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், அப்படி ஒத்துழைக்கவில்லை என்றால் உங்களுக்கு வழங்கியுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்து கைது செய்து விசாரணையை சந்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

ad

ad