புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2014

நல்லூர் யமுனா ஏரி தனியாருக்கு விற்பனை?- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட யாழ்.மேயர்
யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரி அமைந்துள்ள காணி தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை உள்ள சங்கிலித்தோப்பு வளவில் இந்த நீரேரி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எஞ்சியுள்ள வரலாற்று பொக்கிசங்களில் ஒன்றான இந்த காணி தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தை யாழ்.மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார்.
நல்லைக்குமரன் 22வது நூல் வெளியீடும் யாழ். விருது வழங்கும் நிகழ்வும் கடந்த 11ம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யமுனா ஏரியை தூர்வாரி புனரமைப்பு செய்ய தான் உள்ளிட்ட மாநகரசபை அதிகாரிகள் நேரில் சென்றதாகவும், மறுநாள் தங்களிற்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதில்- காணியை தான் கொள்வனவு செய்து விட்டேன், மீறி இனி உள்நுழைந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என தனியார் ஒருவர் அறிவித்திருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல, நல்லூர் மந்திரிமனை அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு விடயமும் எப்படி நடந்ததென தனக்கு தெரியாதெனவும் இவற்றை மீட்க நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் கூறியுள்ளார்.

ad

ad