புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” கரிகரன் 
இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது - கேர்ணல் ஹரிகரன்:-
தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்காதது. மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் குறித்த வெளிப்படையான
விசாரணைகளை முன்னெடுக்காததுமே இலங்கை அரசாங்கத்தின் பாரிய இரு தவறுகள் என இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இந்த இரு தவறுகள் காரணமாக ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிழ்சியற்ற சூழுல் நிலவுகின்ற போதிலும் தமிழர்கள் தமிழீழம் சாத்தியமானது என கருதுவார்களா என்பது சந்தேகமே. சர்வதேச புலிகள் மத்தியில்  புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றிற்கு அவர் தெரிவித்துள்ளதாவது.. யுத்தம காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுடைய துயரங்களை தீர்க்கும் விடயத்தில் அரசாங்கம் போதியளவிற்கு உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளவில்லை. அரசாங்கம்  தன் மீது அந்த  மக்களுக்கு நம்பிக்கையையும்,பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த தவறிவிட்டது.

ஐந்து வருடஙளுக்கு பின்னரும் நல்லிணக்கம் உருவாவதற்கு இடமளிக்கப்படவில்லை, ஆகவே மக்கள் மகிழ்ச்சியாகயில்லை இதனை பயன்படுத்தி இலங்கையில் மறுபடி விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு எஞ்சியிருக்கின்ற உறுப்பினர்கள் முயலலாம்.

மகிழ்சியற்ற சூழுல் நிலவுகின்ற போதிலும் தமிழர்கள் தமிழீழம் சாத்தியமானது என கருதுவார்களா என்பது சந்தேகமே. சர்வதேச புலிகள் மத்தியில்  புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை. சர்வதேச சக்தியொன்றின் ஆதரவும் இல்லை இலங்கை அரசாங்கம் தனது ஆட்சி முறையை மறுசீரமைக்க வேண்டும்.இவ்வாறான விடயங்கள் இந்தியாவிலும் இருப்பதாக சொல்லி;ககொண்டிருப்பதில் அர்த்தமில்லை .

தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான  செயற்பாடுகளை ஆரம்பிக்காதது. மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் குறித்த வெளிப்படையான விசாரணைகள் இல்லாதது போன்ற தனது இரு தவறுகளுக்கு அரசாங்கம் தீர்வு காணவிட்டால் தற்போதைய சூழ்நிலை மாறாது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தலாம்,  
 

ad

ad