புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014

10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு! உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று
நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், மதியம் வரை சராசரியாக 30 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி, குஜராத் மாநிலம் வதோதரா, தெலங்கானா மாநிலம் மேடக் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக உத்தரபிரதேசத்தில் வாக்காளர்கள் அதிக ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், ஆஸம்கர், மைன்புரி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். பின்னர் முலாயம் சிங் ராஜிநாமா செய்த மைன்புரி தொகுதியில், இந்த முறை அவரது மூத்த சகோதரரின் மகன் தேஜ் போட்டியிடுகிறார்.

இதேபோல் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த வதோதரா தொகுதியில், அப்பகுதியின் துணை மேயர் ரஞ்சன் பென் பட்டா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த மேடக் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதைத் தவிர, உத்தரபிரதேசத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ad

ad