புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2014



வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் கடமையாற்றி வந்த கே.கிருஸ்ணமூர்த்தி என்பவரின் ஒப்பந்தக் காலம் முடிவுற்றதையடுத்து, அப்பதவி வெற்றிடத்துக்கு அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 
இன்று சிவபாதம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் சிவஞானம் தெரிவித்தார்.
இதேவேளை, வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் திருத்திய பிரேரணை, சிவாஜிலிங்கத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்படாமல் பிரிதொரு நபரின் மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர்கள் தங்களின் பெயர்களில் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாகவே பிரேரணைகள், கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
மின்னஞ்சல் முகவரிகளை மாற்றம் செய்தால் அது தொடர்பில் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் சிவஞானம் மேலும் கேட்டுக்கொண்டார்.

ad

ad