புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014


செப்டெம்பர் 11ல் மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆயுதக் கப்பல்கள்: மகிந்தவின் அமெரிக்க விஜயத்தின் மூலம் அம்பலம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதியின் இந்த விஜயமானது, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஐ சந்திப்பதற்கும் இலங்கையின் மதிப்பை உயர்த்த ஒழுங்கு செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனத்தினூடாக அந்நாட்டின் உயர் அரசியலாளர்களைச் சந்திக்கவுமே என ஆய்வாளர் சுதர்மா தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியினூடாக இது குறித்த கருத்துக்களை  அவர் பகிர்ந்து கொண்டார்.
மூன்று ஆண்டுகளிற்கு முன்பு 2011ம் ஆண்டு தை மாத ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ச இவ்வாறானதொரு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது, அவருக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் என்ற செய்தி தமிழர்களிடையே பரப்பப்பட்டது.
அதேபோன்று இந்த முறை விஜயத்தையும் மகிந்த ராஜபக்சவிற்கு சிறுநீரோடு இரத்தம் கலந்திருக்கிறது. அதிகளவு மது பாவனையால் இது ஏற்பட்டது. இதனால் உடனடியாகவே சிகிச்சைக்காக ஜனாதிபதி மகிந்த அமெரிக்காவிற்கு அவரது மூத்த சகோதரரால் அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உண்மை மாறாக இருக்கிறது. மகிந்த ராஜபச்சவின் மூத்த சகோதரரான டட்லி ராஜபக்ச ஒரு அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றவர். ரெக்ஸாஸ் மாநிலத்தின் கியுஸ்ரன் நகரில் இருப்பதால் அவரது வாசஸ்தலத்திலிருந்தவரே இவ்வாறான தனிப்பட்ட சந்திப்புக்களிற்கு ராஜபக்ச முனைப்புக்களை மேற்கொண்டார்.
2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் திகதி இரவு மற்றும் செப்டம்பர் 11ம் திகதி பகலிற்கு இடையில் தெய்வேந்திர முனையிலிருந்து தென் கிழக்காக சுமார் 2800 கிலோ மீற்றருக்கு அப்பால் வைத்து நான்கு விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் 24 மணிநேரத்திற்குள் மூழ்கடிப்பட்டிருந்தன.
அமெரிக்காவே விடுதலைப் புலிகளின் கப்பல்கள் பற்றிய துல்லிய தகவல்களை வழங்கி வந்தது.
ஐக்கிய நாடுகளவையின் போர்க்குற்ற விசாரணை அமைப்பிற்கான அமெரிக்கத் தூதுவராகவிருந்த கிளின்ட் வில்லியம்ஸ் என்பவர் யூலை 2009ல் அமெரிக்க அரசிற்கு ஒரு அறிக்கையை வழங்கியிருந்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தென்னாசியப் பிரிவிற்குப் பொறுப்பான அதிகாரியுடன் தான் மேற்கொண்ட சந்திப்பில் இரகசியமாகப் பகிரப்பட்ட தகவல்களின்படி இலங்கை இராணுவம் போர்க் குற்றமிழைக்கவில்லையென்பதே அந்த இரகசிய அறிக்கை.
பொதுமக்களை வெளியேறவிடாமல் தடுப்பதன் மூலம் அவர்களிற்கு பாராதூர இழப்புக்களையேற்படுத்தி இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்பதனைக் காட்டுவதற்காக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கையாக செஞ்சிலுவைச் சங்கத்தினை அடிப்படையாக வைத்து அவர் தனது இரகசிய அறிக்கையை அனுப்பியிருந்தாலும், இதன் பின்னரே ஐக்கிய நாடுகளவை இறுதிக்கட்டப் போரில் இறந்த பொதுமக்களின் தொகை 40,000க்கும் மேல் என்று தெரிவித்தது.
இது இவரது அறிக்கையை வலுவிழக்கச் செய்தது.
2001ம் ஆண்டு செம்படம்பர் 11ம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல், கட்டுப்பாடற்ற மத்திய கிழக்கின் பயங்கரவாதம் என்பன ஈழப்போரிற்கும், தமிழ் மக்களின் விடுதலைப் போரிற்கு, அந்தப் போராட்டத்திலிருந்து நிழலரச நிலைக் கட்டமைப்பை அடைந்த ஒரு நிர்வாகத்திற்கும் காலம் தந்த சாபமாக அமைந்து விட்டது என்பது உட்பட பல அரிய, புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ad

ad