புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014


நெதர்லாந்தில் கடும் மூடுபனி: 150 கார்கள் தொடர் மோதல்-இருவர் பலி  
நெதர்லாந்து நாட்டில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள் தொடர் மோதலில் சிக்கின. இந்த மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.


ஆம்ஸ்டர்டாமில் இருந்து தென்மேற்காக உள்ள கோயஸ் மற்றும் மிடில்பர்க் நகரங்களுக்கிடையே உள்ள ஏ.58 நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்துள்ளது. இதில் இருவர் பலியானதாக ஜீலேண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளரான எஸ்தர் பூட் தெரிவித்தார். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார். கடும் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அம்மாகாண பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரான ஹேன்ஸ் ஹப்ரெக்ட்செ கூறினார்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற 50 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். படுகாயமடைந்தவர்கள் மட்டும் சிகிச்சைக்காக ரோட்டர்டாமில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு உள்ளூரிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ad

ad