புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014


பல்லாவரம்–தாம்பரம் நகராட்சி வார்டுகளில்
 அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு


பல்லாவரம், தாம்பரம் நகராட்சியில் காலியாக இருக்கும் வார்டுகளுக்கும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பல்லாவரம் நகராட்சி 2–வது வார்டு இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.கணேசன், பா.ஜனதா வேட்பாளர் ராம்குமார் மற்றும் சுயேச்சையாக முருகன், லட்சுமிநாராணன், மோகன், சிவக்குமார், ஜனார்த்தனம் ஆகிய 7 பேர் மனு செய்து இருந்தனர்.

வேட்பு மனு பரிசீலனையின்போது ஜனார்த்தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் 6 பேர் களத்தில் நின்ற நிலையில் பா.ஜனதா வேட்பாளர் ராம்குமார், சுயேச்சை வேட்பாளர்கள் முருகன், லட்சுமிநாராயணன், மோகன், சிவக்குமார் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.கணேசன் போட்டியின்றி தேர்வாகிறார்.

தாம்பரம் நகராட்சி 7–வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நாகூர்கனி, பா.ஜனதா சார்பில் சந்தானம் ஆகியோர் போட்டியிட்டனர். 33–வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக கோமளா, பா.ஜனதா வேட்பாளராக சாமுண்டீஸ்வரி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்புமனு பரிசீலனையின்போது 2 வார்டுகளிலும் பா.ஜனதா வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுவை முன்மொழிந்தவர்கள் அதே வார்டை சேர்ந்தவர்கள் அல்லாததால் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து 2 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.

ad

ad