புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

19 சிறுமிகளை கொன்ற காமக்கொடூரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
19 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற சுரிந்தர் கோலிக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா அருகே சுரிந்தர் கோலி என்பவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2006 வரை 19 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர் விசாரணையில், கொலை செய்த சிறுமிகளை தனக்கு வேலை அளித்த தொழிலதிபர் மோனிந்தர் சிங் என்பவரின் பண்ணை வீட்டுக்கு அருகே புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மோனிந்தர் சிங் மற்றும் அவரின் வேலைக்காரரான சுரிந்தர் சிங் கோலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலி மீது பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளில் 5 வழக்குகளில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
கீழ் நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததையடுத்து கடந்த யூலை மாதம் சுரிந்தர் கோலியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், காசியாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 42 வயதான சுரிந்தர் கோலிக்கு வருகின்ற 12ம் திகதி மீரட் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைக் கண்காணிப்பாளர் ரிஸ்வி தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்று நள்ளிரவில் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து வீட்டுக்கே சென்று சுரிந்தர் கோலியின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சுரிந்தர் கோலிக்கு நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மேலும், இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நள்ளிரவு 1.40 மணியளவில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏழு நாட்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ad

ad