புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

2ஜி ஊழலில் மன்மோகன் சிங்கிற்கும் பங்கு – கமல்நாத் பரபரப்பு தகவல்

மத்திய அரசின் முந்தைய தலைமை கணக்காளர் வினோத் ராய் நேற்று 2 ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை தொடர்பு படுத்தி
பேசியிருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தவறு செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தெரிந்தே எல்லா விஷயங்களும் நடந்ததாகவும்,எனினும், கணக்குத் தணிக்கை அறிக்கையில் மன்மோகன் சிங்கின் பெயரை சேர்க்கக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தன்னை நிர்ப்பந்திக்க முயன்றதாகவும் முன்னாள் தலமை தணிக்கை கணக்காளர் வினோத் ராய் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போதும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போதும் பிரதமராக இருந்தவர் என்ற முறையில் மன்மோகன் சிங் தனக்குரிய பொறுப்புகளை தட்டிக்கழிக்க முடியாது என்றும் வினோத் ராய் தெரிவித்தார்.
இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு குறித்து, தொடர்ந்து சர்ச்சை எழுந்ததும், இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டுமெனில், இது தொடர்பாக விசாரிக்க, ஒரு குழு அமைக்க வேண்டும் என, மன்மோகன் சிங்கிற்கு, அப்போதைய வர்த்தக அமைச்சர் என்ற முறையில் கடிதம் எழுதினேன். ஆனால், இதுகுறித்து குழுவை அமைக்க, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் செயல்படாதது எனக்கு முகுந்த அதிருப்தி அளித்தது என தெரிவித்தார்.
2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் கமல் நாத் மேற்கண்டவாறு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் புகார் தீவிரமானது என்றும், இதுகுறித்து காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad