புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

உதயன் மீது டக்ளஸின் வழக்கு நவம்பர் 27 இல்
news
உதயன் பத்திரிகைக்கு எதிராக இழப்பீடு கேட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு தொடர்பான விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
 
இதன்போது டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்தரப்பில் வாதிட்ட சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக குடைந்தெடுக்கப்பட்டு குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
 
தனது சாட்சியத்தில் அமைச்சர் டக்ளஸ், உதயன் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை மறுத்தார். தானோ தனது கட்சியினரோ கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை அது தமது கொள்கையும் இல்லை என்றார்.
 
கடத்தல்களிளோ, கப்பம் வாங்குவதிலோ தனக்கும் தனது கட்சிக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்றுகூடச் சொன்னார்.
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கமும் அவரது குடும்பத்தினரும் தனக்கு நெருக்கமான நண்பர்கள் என்றும்  பரராஜசிங்கத்தின் கொலையில் தனது கட்சிக்குத் தொடர்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
 
இவை அனைத்தையும் தான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொண்ட " உண்மையைத் தவிர வேறு எதனையும் தெரிவிப்பதில்லை " என்ற சத்திய வாக்குக்கு அமையவே தெரிவிக்கிறேன் எனவும் பலதடவைகள் நீதிமன்றத்தை உசார் படுத்திக்கொண்டார்.
 
ஈ.பி.டி.பி யின் முதலும் முழுதுமாக தானே இருக்கிறார் என்றும் டக்ளஸ் என்கிற அடையாளமே தனது கட்சி என்றும் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். 
 
குறுக்கு விசாரணையின் போது சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்க்க விரும்பிய அமைச்சர் ஆம் அல்லது இல்லை என்ற பதிலுக்கு அப்பால் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கங்கள் கொடுத்தார்.
 
இதனால் ' முதலில் கேள்விக்கான பதிலை ஆம் அல்லது இல்லை என்று கூறிவிட்டு உங்கள் விளக்கத்தை வழங்குங்கள் ' என்று நீதிமன்றால் அறிவுறுத்தப்பட்டதுடன் நீதிமன்றத்தில் நடைமுறைகள் எப்படி இருக்கும் என்று அவருக்கு நாசூக்காக விளங்கப்படுத்தப்பட்டது.
 
சட்டத்தரணி சுமந்திரனின் குறுக்கு விசாரணைகளில்  இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைச்சரை நோக்கி கேட்கப்பட்டது.
 
அதில் முதல் விடயம் நீதிமன்றத்தை ஏய்த்துவிட்டு - அதாவது திருப்பி வருவார் என்று இந்திய நீதிமன்றத்துக்கு உறுதியளித்துப் பிணையில் வெளிவந்த போதும் இந்தியாவை விட்டு நீதிமன்றத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டமை - வெளியேறி இலங்கை வந்தமை.
 
 
இரண்டாவது விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூடப் பலர் கடத்தல் பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதுடன் கட்சி என்பது முழுதும் முதலுமாக டக்ளஸ் தேவானந்தா என்று அவரே மன்றில் தெரிவித்திருப்பதால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே என்பதாகும்.
 
இவற்றை நீதிமன்றத்துக்கு விளக்கும் வகையில் அடுத்தடுத்து சரமாரியாக அமைச்சரை நோக்கி கேள்விக்கணைகள் வீசப்பட்டன. தான் ஒரு கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சட்டத்தரணி அடுத்த கேள்வியைக் கேட்கிறார் என்று அது தொடர்பில் அமைச்சர் முறையிட்டார்.
 
இந்த குறுக்கு விசாரணையின் போது நேற்று முன்தினம் வரையில் இந்தியாவில் தான் ஒரு பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபராகவே இருந்தார் என்பதை டக்ளஸ் ஏற்றக்கொண்டார்.
 
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்கிறார் என்றும் இருந்தாலும் அதில் தன்னைப்பற்றியும் சொல்லப்பட்ட விடயங்கள் தவறானவை என்றும் தெரிவித்தார்.
 
இதனையடுத்து இந்த குறுக்கு விசாரணையை நவம்பர் மாதம் 27 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மாவீரர் தினம் என்பதுடன் உதயன் பத்திரிகை நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு 29 ம் ஆண்டு நிறைவு தினமும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=128343421112124117#sthash.DslbO0YU.dpuf
பத்தாவது நாளில் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இன்று 9 நாட்களை கடந்து Murten நகரை நோக்கி சென்று கொண்டிருகின்றது.
பயண வழிகளில் மலைப் பிரதேசங்களாக அமைந்திருந்தாலும் ணத்தை மேற்கொள்பவர்கள் மிக உறுதியோடு ஐ.நா நோக்கி பயணிக்கின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கும் பேரணியில் தமது நீதிக்கான பயணத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, தொடர்ந்து மனிதவுரிமை ஆணையகத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
ஈருருளிப் பயணத்தை மேற்கொள்பவர்கள் அனைத்து தமிழ் மக்களையும் இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு வேண்டி நிற்கின்றனர்.

ad

ad