புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

3 ஓட்டங்களால் வெற்றிக் கனியுண்ட இங்கிலாந்து 
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான சர்வதேச 20 - 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால்  வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பேமின்ஹேமில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தார்.
 
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 
அணித் தலைவர் இயோர்ன் மோர்கன் 71 ஓட்டங்களையும் அலக்ஸ் ஹேல்ஸ் 40 ஓட்டங்களையும் அணிசார்பாக பெற்றுக்கொடுத்தனர்.
 
181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
 
இந்திய அணிசார்பாக விராட் ஹோலி 66 ஓட்டங்களையும் ஷீக்கர் தவான் 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் இங்கிலாந்து அணியின் நான்கு பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
 
போட்டியின் சிறப்பாட்டகாரராக இங்கிலாந்து அணித்தலைவர் இயோர்ன் மோர்கன் தெரிவுசெய்யப்பட்டார்.
 
 
 
 
 
 
 
 

ad

ad