புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014

சுப்பிரமணியசாமி மீது 3வது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெ.,

சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்– அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில்,

’’பாரதீய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதள பக்கத்தில், ‘திலீபன் நினைவு நாளை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்குகிறது’ என்று குறிப்பிட்டு சில அவதூறு கருத்துக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப் பட்டுள்ளது.

இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, சுப்பிரமணிய சாமி மீது தமிழக முதல் அமைச்சர் சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. தற்போது, 3–வது வழக்கு சுப்பிரமணியசாமி மீது இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ad

ad