புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2014



மிழகம் முழுக்க தி.மு.க. உட்கட்சி தேர்தல் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. பொறுப்புக்கு வருவதற்கு ஒவ் வொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சேலத்திலோ அடுத்தகட்ட பயங்கரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது பதவி வெறி.

நள்ளிரவு நேரம்... அந்த லாட்ஜ் அறையை மெல்ல மெல்ல நெருங்கு கிறது போலீஸ் கமிஷனர் அமல்ராஜின் காக்கிகள் டீம்.

உள்ளேயிருந்து ""எலேய் ஏதோ பெரிய தலையாமாம்... அத முடிக் கிறதுக்கு முன்ன சுள்ளான் ஒன்னை முடிக்கணுமாம்... ஒண்ணரை (ஒண்ண ரை லட்சம்) பேசியிருக்காங்க. பட்சிகிட்ட (இன்பார்மர்) இருந்து ஓலை வந்துட்டா சம்பவத்துல இறங்கிட வேண்டியதுதான்''’பெரிய கை , தன்னுடைய அல்லக்கைகளுக்கு அசைன் மெண்டை விளக்கிக்கொண்டிருந்த நேரத்தில்...
 

கதவை உடைத்து உள்ளே நுழைந்த காக்கிகள் டீம், துப்பாக்கி முனையில் அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு சென்றது.

பிடிபட்ட இவர்கள் யார்?

தமிழகத்தையே மிரட்டி வந்த கூலிப்படைத் தலைவன் திருநெல்வேலி சுந்தர். இவன், நாம் தமிழர் கட்சி முத்துகுமார், ஈரோடு ரவுடி ஸ்டீல் ரவி உட்பட அஞ்சுக்கும் மேற்பட்ட மர்டர்களை முன்நின்று நடத்தியவன். எங்களிடமிருந்து தப்பிச்சு ஓடும்போது கீழே விழுந்து இவன் (சுந்தர்), பாண்டியன், கோபிநாத்  மூவர் காலும் உடைந்துவிட்டது. (வழக்கமாக சொல் வதுதான்)இவர்களை ஏற்பாடு செய்த சேலம் பிரதீப், சக்தி, பாண்டியன், சங்கர் உட்பட ஏழு பேரை கைது செஞ் சுருக்கோம். தி.மு.க பிரமுகரை கொல்ல வந்த சதியை முறியடித்துள்ளோம்''’என்றார் கமிஷனர் அமல்ராஜ்.

‘அந்த தி.மு.க பிரமுகர் யார்? கிச்சிப் பாளையம் கேபிள் சரவணனும், அவர் கூடவே இருக்கும் செல்லதுரையும்தான்’என்று மர்ம முடிச்சுகளை அவிழ்த்தனர்.

கேபிள் சரவணன்?


""வளர்ந்து வரும் தாதா கேபிள் சரவணன். சின்ன வயதிலேயே கேபிள் டி.வி. தொழிலில் வேலை செய்ததால் கேபிள் சரவணன் என அடைமொழியானது. மறைந்த ரவுடி அருளுக்கும், ஆட்டோ பாலனின் தம்பி பரமேஸுக்கும் வலதுகரமா தன்னுடைய ரவுடியிச லைஃப்பை தொடங்கிய  கேபிள் சரவணன், அடுத்தடுத்து வக்கீல் குணா, பாரப்பட்டி சுரேஷ் என இடம்மாறி இறுதியில் மாநில இளைஞரணி துணைச்செயலாளரும், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளருமான வக்கீல் ராஜேந்திரன் மூலம்  முக்கிய மாவட்ட பொறுப்பு தனக்கு கிடைக்க காய் நகர்த்திக்கிட்டிருக்காரு சரவணன். இதே கிச்சிப்பாளையத்துல பகுதி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பொறுப்புல இருக்குற பல்லன் பிரதீப்புக்கு இதனால கடுப்பு. அதனாலதான் கேபிள் சரவணனையும், செல்லதுரையையும் போட கூலிப்படை ஏற்பாடு செஞ்சாங்க'' என்கின்றனர் உளவு போலீசார்.

ஸ்டாலின் ஆதரவாளரான வக்கீல்’ ராஜேந்திரனிடம் போனில் பேசிக்கொண்டிருந்த கேபிள் சரவணனை சந்தித்தோம்.

""என்னை ஏற்கனவே மூணுமுறை மட்டை செய்ய ஆளுங்க வந்தாங்க. தப்பிச்சுட்டேன். எல்லாத்தையும் செய்றது மேட்டூர் சசி. நானும் அவனும் நெருங்கிய நண்பர்களாத்தான் இருந்தோம். ஆனா தொழில்ல ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்துல பிரிஞ்சுட்டான். அவனோட ரைட்ஹேண்டா இருக்கிறவன்தான் பிரதீப். சசி சொல்லித்தான் என்னை முடிக்க வந்துருக்காங்க. ஆனா சசி இன்னும் கைது செய்யப்படலை'' என்றார் புதிர் வைத்தபடி..

தமிழகம் முழுக்க உள்ள கூலிப் படைகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ள மேட்டூர் சசியைத் தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ்.


""இவர்கள் கொல்ல வந்ததே வீரபாண்டி ராஜா அண்ணனைத்தான்'' என புது குண்டை வீசிய ராஜாவின் ஆதரவாளர்கள், ""கட்சிக்குள்ள நியமனம் இல்லை. கட்டாயம் தேர்தல்தான் என தலைவர் உறுதியா சொல்லிட்டாரு. அண்ணனுக்கு செல்வாக்கு ஜாஸ்தி. தேர்தல்ல நிச்சயம் ஜெயிச்சுடுவோம். அதை முறியடிக்கத்தான் ஏதோ பிளான் பண்ணியிருக்காங்க. இந்த பிரதீப்புக்கு பொறுப்பு போட்டதே வக்கீல் ராஜேந் திரன்தான். அன்னைக்கு காலையில கட்சி மாவட்ட கூட்டத்துல கலந்துக்க அவங்க டீம் ஆளுங்க எல்லோரும் ஒண்ணாதான் கட்சி அலுவலகத்திற்கு ராஜேந்திரன்கூட வந்தாங்க. மாட்டிக்கவும்... தப்பிக்க நல்லா ட்ராமா நடத்துறாங்க. ராஜேந்திரன் தான் ரவுடிகளை தன்கூட வைத்துக்கொண்டு ரவுடிசத்தை வளர்த்து வர்றாரு'' -காட்டமாகினர்.

ராஜேந்திரன் தரப்பினரோ ""ஒன்றரை வருடம் முன்பே அண்ணனை போட்டுத்தள்ள ராஜா டீம் தான் ஆள் செட் செஞ்சாங்க. அப்போ போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கொடுத்தாங்க. நாங்க அப்படிப்பட்ட ஆளுங்க இல்லை''’என்கிறது.

இதுகுறித்து வீரபாண்டி ராஜாவிடம் பேசினோம்.

""உன் வீட்டுக்கு வெடிகுண்டு வச்சுருக்கோம். திருச்சி ராமஜெயத்துக்கு ஆன கதிதான் உனக்கும் நடக்கும். உன்னை கொல்லப்போறோம்னு இப்படி பல மிரட்டல்கள் தொடர்ந்து வந்துக்கிட்டுதான் இருக்கு. நான் எதைப்பற்றியும் கவலைப்படலை. ஆனா அவங்க தரப்புதான் (ராஜேந்திரன்) போனமுறை புகார்லாம் கொடுத்தாங்க. அது உண்மையில்லைன்னு பிற்பாடு போலீசே கூறி பாதுகாப்பையும் திரும்பப் பெற்றார்களே! எனவே எந்த மிரட்டலையும் நான் பொருட் படுத்துறதில்லை'' என்றார் விளக்கமாக.

குற்றச்சாட்டுகளை வக்கீல் ராஜேந்திர னிடம் முன்வைத்தோம்.

""எந்தக் குற்றச்சாட்டுகளிலும் உண்மை யில்லை. எனக்கு கட்சிப் பசங்க என்ற அடிப் படையில் தான் அந்த பசங்களைத் தெரியும். மற்றபடி நான் ரவுடிகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய அரசியல் பயணத்தில் இதுவரை எந்த ப்ளாக்மார்க்கும் இல்லை. எனக்கு எதிராக சும்மா கதை கட்டி விடுறாங்க''’என்றார் சற்று கோபமாகவே.

கேபிள் சரவணனுக்கு குறி வைக்கப்பட்டி ருப்பது உண்மைதான். ஆனா இந்த சம்பவம் அவருக்கு மட்டும் வைக்கப்பட்டது இல்லை. வேற பெரிய தலைக்கும் வைக்கப்பட்டதுதான். அது லீகலா வெளிய தெரிஞ்சா வழக்கு அது, இதுன்னு இழுத்துட்டுப் போகும். அதைத் தவிர்க்கத்தான் காக்கிகள் அவனுங்க காலை உடைத்துவிட்டு வேறு மாதிரி ரவுடிகளுக்குள் மோட்டிவ் போல மாத்திட்டாங்க. பதவி ஆசை இன்னும் சேலத்தில் என்னென்ன ‘சம்ப வங்களைக்’ கொண்டுவருமோ?''’என்கின்றனர் சில மூத்த உ.பி.க்கள்.

ஒண்ணரை வருடம் முன்பே ‘தி.மு.க. புள்ளிகள் உயிருக்கு குறி’ என பிப்-23, 2013   நமது நக்கீரனில் எச்சரிக்கை செய்தோம். எச்சரிக்கை என்பது வரும்முன் காப்பது தானே!

-சே.த.இளங்கோவன் & செ.தமிழ்அகி



ad

ad