புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014


தீர்ப்பு எனும் க்ளைமேக்ஸை நெருங்கிவிட்டது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.-சசி உள்ளிட்டோர் மீது நடந்த வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு, தீர்ப்பு தேதிக்கு எப்படியும் ஜெ. தரப்பு தடை வாங்கிவிடும் என்பதே தமிழகத்தின் பொதுவான மனநிலை. ஆனால் இம்முறை ஜெ.வுக்கு வாதாடிய சீனியர் வழக்கறிஞர் பி.குமாரே, ""இனி தீர்ப்புக்கு தடையேதும் வாங்க முடியாது. தீர்ப்பை எதிர்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார் நம்மிடம் தெளிவாகவே.

தீர்ப்பு நாளான 20-ம்தேதி என்ன நடக்கும் என தமிழக-கர்நாடக வழக்கறிஞர்களிடம் விரிவாகவே பேசியது நக்கீரன். ஜெ.தரப்பு வக்கீல்களிடம் மிகுந்த நம்பிக்கை வெளிப்பட்டது. சீனியர் வக்கீல் குமார், ""சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா மிக பொறுமையுடன் ஆழ்ந்த கவனத்துடன் எங்களது வாதங்களை உன்னிப்பாகக் கேட்டார். நாற்பது நாட்களுக்கு மேல் நீடித்த எங்களது வாதத்தில் அரசு தரப்பு குறுக்கிடவே இல்லை. ஆச்சார்யா போன்ற பெரிய ஜாம்பவான்கள் அரசு வழக்கறிஞர்களாக இருந்திருந்தால் கூட நீதிமன்றத்தில் நாங்கள் வைத்த வாதங்களில் பொதிந்திருந்த உண்மைகளை வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டிருப்பர். எனவே தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாகத்தான் வரும். முதல்வர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து நிச்சயம் வெளியே வருவார். அரசியலில் அவருக்கு நிரந்தரமா செல்வாக்கு உருவாகும்'' என்றார் விளக்கமாக.

மேலும் அவரே, ""வழக்கின் தீர்ப்பை தற்போது வழக்கு நடந்து வரும் பெங்களூரு செ­ன்ஸ் கோர்ட் வளாகத்தில் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்ய முடியாது. அதனால் பெங்களூரு மத்திய சிறையான பரப்பனஹள்ளி அக்ரஹார சிறை வளாகத்தில் ஒரு சிறப்பு கோர்ட்டை அமைத்து அதில் தீர்ப்பை வழங்குமாறு நீதிமன்றத்தை நாட உள்ளோம்'' என்கிறார். ஜெ.வுக்காக வாதாடியவர்களும் ஆலோசனை தெரிவித்த சட்ட வல்லுநர்களும் நம்பிக்கை குறையாமல் இருப்பதை அவர்களிடம் பேசியதில் அறிய முடிந்தது.


அரசுத் தரப்பில் வாதாடியவர்களோ இவர்களுக்கு சற்றும் சளைக்காத நம்பிக்கையுடன் உள்ளனர். ""இந்த வழக்கு நிச்சயமாக குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு சாதகமானது அல்ல. தீர்ப்பும் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த வழக்கில் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் நம்புகிறோம். ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) சி, 13(2), ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் 13(1)  சி அரசு ஊழியர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என குற்றம் சாட்டும் பிரிவு. 13(2) என்பது வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்தார் என நிரூபிக்கப்பட்டால் என்ன தண்ட னை என விளக்கும் சட்டப் பிரிவு. 13(2)ன்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடம். அதிகபட்சம் ஏழு வருடம் என தண்டனை வழங்க சட்டம் இடமளிக்கிறது. அவருக்கு எத்தனை வருடம் தண்டனை என்பதை தீர்மானிக்க நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவுக்கு தனிப்பட்ட அதிகாரத்தை நீதித்துறை அளித்துள்ளது'' என்று சட்டப் பாயிண்டுகளுடன் விளக்கினார் அரசு துணை வழக்கறிஞர் முருகேஷ் மரடி.

""கர்நாடக மாநில நீதித்துறை நடைமுறைகளில் ஒரு வழக்கை நடத்துவதற்கும் தீர்ப்பு வழங்குவதற்கும் விசே­ நடைமுறைகள் உண்டு. ஒரு வழக்கின் இறுதி வாதம் முடிந்தால் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் தீர்ப்பு கட்டாயம் வழங்க வேண்டும் என கர்நாடக நீதிமன்ற சட்ட நடைமுறை சொல்கிறது. இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறை இது'' என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞரான நடேசன்.

இந்த சட்ட நடைமுறைகளின்படி தீர்ப்பு வழங்கப்படும் நாளான 20-ம்தேதி கர்நாடக நீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி அமையும் என அவரிடம் கேட்டோம். விளக்கமாக சொல்லத் தொடங்கினார். ""காலை 11 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன் நீதிபதி, தீர்ப்பின் மிக முக்கியமான பகுதிகளைப் படிப்பார். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா அல்லது நிரூபிக்கப்படவில்லையா என்பது இடம் பெற்றிருக்கும். குற்றம்  நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி படித்தாலே அத்தனைபேரும் விடுதலைதான். அவர்கள் நீதிபதியை பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியேறிவிடலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது என நீதிபதி அறிவித்தால்தான் சிக்கலான நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வரும்'' என்ற நடேசன், அது குறித்தும் விளக்கினார்.


""குற்றம் சாட்டப்பட்டவர்களை நோக்கி, உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்பார். நாங்கள் நிரபராதிகள். எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையைக் கொடுங்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்கலாம். அல்லது எங்கள் மீது விதிக்கப்படும் தண்டனை குறித்து எங்களது வழக்கறிஞர்கள் வாதம் புரிய அனுமதிக்க வேண்டும் என கேட்கலாம். அப்படி அவர்கள் தரப்பில் கேட்டால், அன்று மாலையில் வழக்கறிஞர்கள் வாதம் அனுமதிக்கப்படும். அந்த வாதத்தில் குறைந்தபட்ச தண்டனை, சிறை வசதிகள் இவற்றைப் பற்றி வழக்கறிஞர்கள் வாதம் செய்வார்கள். இது ஜெ. மீதான வழக்கு. அவர் ஒரு வி.வி.ஐ.பி. என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போயஸ் கார்டனையே சிறையாக பயன்படுத்தும் கோரிக்கை கூட வைக்கப்படலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சிறைவசதிகள் குறித்த கோரிக்கை களை ஏற்பதும் முடிவு செய்வதும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தனிப்பட்ட உரிமை மட்டுமல்ல. சட்டத்துறையும் சிறைத் துறையும் தனித் தனி என்பதால் சிறையின் இட வசதி உள்ளிட்டவற் றைப் பொறுத்து கர்நாடக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன் றாண்டுகள் வரை தண்டனை பெற்றால், தீர்ப்பளித்த நீதிமன்றத்திலேயே ஜாமீன் பெற சட்டம் அனுமதிக்கிறது. நீதிபதி குன்ஹாவே உடனடியாக ஜாமீன் வழங்கிவிடுவார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனுக்கான உத்தரவாதங்களை செலுத்தினால் போதுமானது. அதேநேரம் மூன்று வருடங்களுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைப்பதற்கான வாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பிப்பார். அவர்கள் கோர்ட்டிலிருந்து நேரடியாக சிறைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை என்றால், ஜாமீன் வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது'' என விளக்கினார் நடேசன்.

எம்.எல்.ஏ., முதல்வர் என மக்களின் பிரதிநிதியாக ஜெ. இருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் என்ன நடக்கும் என டான்சி மற்றும் கலர் டி.வி. வழக்கில் ஜெ.வுக்காக வாதா டிய உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரனிடம் கேட்டோம். ""மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு தண்டனை என நீதிமன்றம் அறிவிக்குமேயானால் அந்தத் தீர்ப்பு சொல்லப்பட்ட வுடன் நீதிபதி அரசுக்கும், சட்டசபை அல்லது பாராளுமன்ற சபாநாயகருக்கு உடனடியாக கடிதம் எழுதி தண்டனை பற்றிய விபரங்களை தெரிவித்து விடுவார். செல்வகணபதி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார். அந்த விபரத்தை நீதிமன்றம் மக்களவை சபாநாயகருக்கு அறிவித்தவுடன் அவரது எம்.பி. பதவி மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பறி போகும் நிலைக்குள்ளானது. சபாநாயகர் நடவடிக்கைக்கு முன்பாக செல்வகணபதி தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதுபோல் ஊழல் தடுப்பு சட்டத் தின் கீழ் நடத்தப்படும் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஒருவேளை 2 வருடம் வரை தண்டனை கிடைத்தால் அவரது எம்.எல்.ஏ. பதவி முதலில் பறிபோகும். அடுத்தது முதல்வர் பதவியை அவர் இழப்பார். செல்வகணபதி மீதான தீர்ப்பு வெளியான பிறகு சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பின்படி, மக்கள் பிரதிநிதியாக இருப்பவரைக் குற்றவாளி என ஒரு நீதிமன்றம் அறிவித்தாலே அவரது பதவி பறிபோகும் என சுப்ரீம் கோர்ட் சொல்லி யுள்ளது. அந்தத் தீர்ப்பு வெளியான பிறகு தீர்ப்புக்கு வரும் முதல் வழக்கு இந்த வழக்குதான்'' என்றார் விரிவாக. ஜெ.வின் வழக்கறிஞர் பி.குமாரும் ""குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்களின் பதவி பறி போகும்'' என சுப்ரீம் கோர்ட் சொல்லியிருப்பதை ஆமோதித்து தீரப்பு வரட்டும் பார்க்கலாம்'' என்கிறார்.


பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அதற்கு தடை பெற முடியாதா? என ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் ஆஜராகி அனுபவம் பெற்ற வழக்கறிஞர் குமரேசனிடம் கேட்டோம். ""பொதுவாக நீதிமன்றங்களில் தண்டனைக்குத்தான் தடை வழங்குவார்கள். சிறையில் கழிக்க வேண்டிய காலத்தின் அளவு மாறும். ஆனால் தீர்ப்புக்கு தடை பெறுவது என்பது அரிதிலும் அரிதான வி­ யம். மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், குற்றவாளிகள் என ஒரு நீதிமன்றம் அறிவிக்கு மானால் அந்தத் தீர்ப்பு தடை செய்யப்பட்டால் ஒழிய, அவர் களது எம்.பி./எம்.எல்.ஏ./அமைச் சர் பதவிகள் பறிபோவதை தடுக்க முடியாது. அவர்கள் பெற்ற தண்ட னை காலத்துடன் கூடுதலாக 6 வரு டங்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது'' என்றார் சட்ட விவரங்களை சுட்டிக்காட்டி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதா, கர்நாடக அரசுக்கு உள்ளதா என விளக்கம் பெற முயன்றபோது... வழக்கறிஞர் தினகரன் அதுபற்றி நம்மிடம் பேசினார். ""வழக்கு நடைபெற்றது பெங்களூரு என்பதால் கர்நாடக அரசுதான் மேல்முறையீடு செய்ய முடியும். தமிழக அரசுக்கு அந்த அதிகாரமில்லை. அதே நேரத்தில், இந்த வழக்கை தமிழகத்திற்கு வெளியே விசாரிக்க மனுதாக்கல் செய்து அதற்கான உத்தரவைப் பெற்றவர் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானால் அதனை எதிர்த்து பேராசிரியர் மேல்முறையீடு செய்ய முடியும்'' என்றார்.

தீர்ப்பு. தண்டனை. மேல்முறையீடுபற்றி சட்ட விவரங்கள் நிறைய இருந்தாலும், நம்பிக்கை என்ற ஒற்றை அம்சத்தில் உறுதியாக இருக்கிறது ஜெயலலிதா தரப்பு. இந்த நம்பிக்கை வழக்கறிஞர்களிடம் மட்டுமின்றி அ.தி.மு.க.வினரின் மனதிலும் உறுதியாக இருப்பதுடன் மீடியா, பொதுமக்கள் என சகல தரப்பிலும் வெளிப்பட்டபடி இருக்கிறது. கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில், பெங்களூருவில் வெடிக்கப் போவது அணுகுண்டா, ஊசிப்பட்டாசா வெறும் புஸ்ஸ்ஸ்ஸா... என 20-ம் தேதி தெரிந்துவிடும். 

ad

ad