புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014


விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள்- கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களாக அமைந்துள்ளன
என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பதினைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. எனினும், தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் அரசியல் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் பிரிவினைவாதத்தை அடிப்படையாக் கொண்டது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு தரப்பினர் தீர்மானங்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட இடைக்கால சுயாட்சி அதிகார முiறைம யோசனைத் திட்டத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அண்மைய தீhமானங்களை ஒப்பீடு செய்ய வேண்டும். 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்தியாவினால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட சகல ஆயுதக்குழுக்களினதும் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென்ற இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதனை அரசியல் பிரச்சினையாக உருவாக்கிவிடக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad