புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


புதிய ஐ.நா ஆணையாளரின் கீழ் விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய முடியும் சிறீலங்கா நம்பிக்கை!

புதிய மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் தங்களுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்துவிடலாம் என்ற சிறிலங்காவின் நம்பிக்கை முறிந்துப் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 27வது அமர்வு இந்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இதன் போது சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்றை புதிய மனித உரிமைகள் ஆணையாளர் ஹசன் முன்வைக்கவுள்ளார்.

இந்த அறிக்கை குடுத்து, அறிக்கை வெளியிடப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறியப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சிறிலங்காவின் ஜெனீவாவுக்கான பிரதிநிதி மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க முற்பட்ட போதும், அது இன்னும் கைக்கூடவில்லை.

இது சிறிலங்காவின் எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad