புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014




""எங்கப் பையன் நல்ல சம்பளத்துல இருக்கான். அவனுக்கு,  எங்க சாதியில... எங்க ஸ்டேட்டஸ்க்கு ஏற்றக் குடும்பமா... ரொம்ப லட்சணமான பொண்ணா...குறிப்பா,   குடும்பத்துக்கு அடக்கமான பொண்ணா பாருங்க. இந்தாங்க ஜாதகம்''’’-இது மணமகன் வீட்டில்!

""எங்க பொண்ணோட அழகுக்கும் படிப்புக்கும் என்னக் குறைச்சல்? நல்லவேலையில இருக்குற நல்லப் பையனா பாருங்க. ஜாதி பொருத்தமும் ஜாதக பொருத்தமும் ரொம்ப முக்கியம்''’’-இது மணமகள் வீட்டில்!

ஆனால், "ஆண்மை பிரச்சினை, மலட்டுத் தன்மையால் திருமண வாழ்க்கை சீரழிந்து போய்விடுகிறது. இதனை தடுக்க... திருமணத்துக்குமுன் மணமகனுக்கும் மணமகளுக்கும் மருத்துவபரிசோதனை செய்வதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்கவேண்டும்' என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.  உண்மையிலேயே, திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை  அவசியமா? என்ற கேள்வியை நாம் தொடுக்க பல்வேறு கருத்துக்கள் டும் டும் கொட்டுகின்றன.  

"சொல்வதெல் லாம் உண்மை' லட்சுமி ராம கிருஷ்ணன்


திருமணம்ங் கிறது இரண்டு குடும்பங்கள் இணையக்கூடிய உன்னதமான விஷயம். இதில், மருத்துவ பரி சோதனை செய்வதா? என்பதை நினைக்கும்போதே வேதனை யாகத்தான் இருக்கு. பல்வேறு குடும்பப் பிரச்சினைகளை பார்த் திருக்கிறேன். அதில், என் மனதை வேதனைப்படுத்திய ஒரு விஷயம் இதுதான்.  அப்பா, வயல்வெளி யில கஷ்டப்பட்டு ஒரு பொண் ணை படிக்க வெக்கிறார். கல்யா ணம் பண்ணி வெச்சு ரெண்டு குழந்தைக்கு தாயாகிறாள். கொடுமை என்னன்னா... அவள் பெற்ற இரண்டு குழந்தைகளுக்கு எய்ட்ஸ் தொற்றியிருக்கிறது. பரிசோதனை செய்துபார்த்தால், கணவன்மூலம் தாய்க்கு பரவி அது குழந்தைக்கும் தொற்றி யிருக்கிறது. திருமணத்துக்கு முந்தி தவறான தொடர்பு வெச்சி ருந்திருக்கான். முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா அப்பாவி பெண் ணும் அந்த சின்னஞ்சிறு குழந் தைகளும் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாங்க இல்லையா?  

கவிஞர் சல்மா


‘இதுகுறித்து பத்து வருடத் திற்கு முன்பே நான் உண்மை சம்பவத்தை எழுதியுள் ளேன். எனக்கு நன்கு பழக்கமான ரெண்டு பெண்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் நோயை மறைத்த மணமகனை திருமணம் செய்து பாதிக்கப் பட்ட பெண்களின் கண்ணீர் இன்னமும் என் மனதைவிட்டு அகலவில்லை. இது மட்டுமல்ல,  மாதவிடாய் சரியாக அமைய வில்லை என்பதற்கெல்லாம் பெண்களை விவாகரத்து செய்யும் உலகம் இது. எனவே, திருமணத் திற்கு முன்பு மட்டுமல்ல பின்பும் கூட வருடம் ஒருமுறையாவது இருவருமே முழு உடல் பரி சோதனை செய்து ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால்,  கணவனுக்கு தெரிந்து விடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவசிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரை பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.   

பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பின் தலைவர் நிர்மலா கொற்றவை

திருமணம்ங்குறதே குழந்தை பெறுவதற்கான ஒரு ஏற்பாடு போலவும் அதற்கு தடையாக இருக்கும் ஆண்மை / பெண்மையற்றவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு  தகுதியற்றவர் கள்னும் சொல்றமாதிரி இருக்கு.

பால்வினை நோய்வாய்ப் பட்ட நபர்களோடு பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால் ஏற்படும் தொற்று நோய்கள் பரவாமலிருக்க திருமணத்திற்கு முந்தைய ஆரோக்கிய பரி சோதனையை கட்டாயமாக்க லாம் என்பது மருத்துவ ரீதியான ஒரு தடுப்பு நடவடிக்கை என்கிற வகையில் நாம் பரிசீலிக்கலாம். 

ஆனால்,  குழந்தைப் பேறு தகுதி தொடர்பான ‘போடன்சி’ (ஆண் மை / பெண்மை தகுதி) பரிசோத னைங்கிறது உண்மையில் மனிதர் களை வெறும் குழந்தைப் பேறு இயந்திரமாகவே பார்க்கும் வருத்தமளிக்கும் ஒரு கருத்தியல். ஒருவர் தாம் ‘குறைபாடு’ அற்றவர் என்று ‘சான்றிதழ்’ பெற வேண்டும் என்று சொல்வது தான் உண்மையில் மனித உரிமைக்கு எதிரானது. 

பாடகர், ஆர்.ஜே. சுசித்ரா


கடந்த 2009 முதல் 2013 வரை என 5 ஆண்டுகளில் விவாகரத்து கோரி சென்னை மகளிர் நீதிமன்றத்தில்  20 ஆயிரத்து 877 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. இதில் ஆண் மைக்குறைவு காரணமாக தொடரப்பட்ட வழக்குகள் மட்டும் 2040 என்று புள்ளி விவரம் சொல்கிறது. கணவனால் மட்டுமே கொடுக்கக்கூடிய தாம்பத்ய உறவில் ஒரு பொண்ணு ஏமாற்றப்படுறாள்னா எவ்வளவு பெரிய கொடுமை? வெறும் எச்.ஐ.வி. பரிசோதனை மட்டு மல்ல. விந்தணு பரிசோதனைகள், பால்வினைநோய்கள்,  பி மற்றும் சி மஞ்சள்காமாலை பரிசோதனை, ஆஸ்துமா, மனநோய், பெண் களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், தைராய்டு, பி.சி.ஓ.டி. எனப்படும் பாலி சிஸ்டிக் ஓவரி டிசீஸ் போன்ற பல நோய்களுக்கும் முன்கூட்டியே பரிசோதனை செய்துகொள்வது நல்லது.  

 டைரக்டர் ஆஃப் எய்ட்ஸ் கண்ட்ரோல் முன் னாள் டைரக்டர் சுப்புராஜ் ஐ.ஏ.எஸ்.


மருத்துவ பரி சோதனை அவசிய மான ஒன்றுதான். ஆனால், கண்டிப்பாக நீ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பது உலக சுகாதார மையத்தின் விதிமுறையி லேயே உள்ளது. மருத்துவ பரிசோத னை செய்வதில் பல சிக்கல்களும் இருப்பதால் இதை சட்டமாக்குவது என்பது சரியாக இருக்காது. ஆனால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டமாக மாறவேண்டும். திருமணத்துக்கு முன்பு மிகமுக்கியமாக மனநல ஆலோசகர்களிடம் கவுன்சிலிங் செல்வது மிகவும் நல்லது.

"வாய்மையே வெல் லும்' நிர்மலா பெரிய சாமி


 மருத்துவ பரிசோதனை என் பது எச்.ஐ.வி., ஆண் மையின்மை அறிந்து கொள்வதற்கு மட்டும் என பயப்பட வேண்டாம். சிலருக்கு மரபு வழி பிரச்சனைகள் இருக்கும். அப்படி யிருப்பவர்கள் தங்கள் உடல் தன் மைக்கு ஏற்ப வரன் தேடவும் கூட இந்த பரிசோதனை உதவுமே. ஏனெனில் சில ரத்த வகைகள் கலப்பதால் பிறக்கும் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மருத்துவ உலகம் சொல்கிறது. எனவே, திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியமாக்க வேண்டி முதலமைச்சர் உடனடியாக சட்டமியற்ற வேண்டும்.



தோழர் உ.வாசுகி


திருமணத்திற்கு முன்பே மருத்துவ பரிசோதனை செய் வது நல்ல விஷயம் என்றாலும் இதை சட்டமாக்கினால் அது திணிப்பது போல் ஆகிவிடும். இது மக்களின் உணர்வு பண்பாடு, பழக்க வழக்கம் சார்ந்த விஷயம். தாமாக ஒவ்வொரு குடும்பத்தினரும் முன் வந்து பரிசோத னை செய்து கொள்ள பயிற்றுவிக்க வேண்டும். அரசு பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும். மேலும்,  இதை விவாதமாக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த நோக்கத்துக்கு வெற்றி கிட்டும்.

வழக்கறிஞர் அருள்மொழி


மத்திய - மாநில அரசுகள் சட்ட மாகவே இயற்ற வேண்டும். ட்ராஃபிக் சிக்னல் போடுவதன் மூலம் வாகன ஓட்டிகளை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வருவது போல அரசும் பயோ- டேட்டா, ஜாதகத்தை தாண்டி மருத்துவ பரிசோதனை  செய்த ரிப்போர்ட்டை மணமக்கள் பரி மாறிக்கொள்ள கட்டாயமாக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசு மருத்துவமனை, அரசு மையங்களில் இதற்கென தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும். திருமணம் செய்துகொள்ள போகும் ஆணோ, பெண்ணோ அருகில் உள்ள இந்த மையங்களில் சென்று தனது உடல், உளவியலை பரிசோதிக்க வேண்டும். இதை ஒரு அரசு அதிகாரியே கண்காணிக்க வேண்டும். முழு பரிசோதனை முடிந்த பின் அந்த ரிப்போர்ட்டை அதிகாரி அரசு சீல் இட்டு கையொப்பம் இட்டு தரவேண்டும். உடல் தகுதி குறித்து அரசு தரும் ரிப்போர்ட்டை காண்பித்து தன் திருமணத்தை முடிவு செய்யலாம். ஒரு புது பண்பாட்டுக்கு களம் அமைத்து தந்துள்ளது நீதி மன்றம்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.



தமிழக அரசு இதற்கு என்னவிதமான கொள்கை முடி வை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. அதற்குமுன் இதுகுறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.

பிரபல மனநல ஆலோ சகர் வி.சுனில்குமார்


திருமணத் துக்கு முன்பு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கம் சரியானதுதான். ஆனால், இதை சட்டமாக கொண்டுவந்தால் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை மருத்துவ-உளவியல் ரீதியாக நாம் அலசவேண்டும். உதாரணத்துக்கு, திருமணமானதி லிருந்து குடித்துக்கொண்டே இருக்கிறார், தாம்பத்ய வாழ்க்கை யில் ஒருநாள்கூட ஈடுபடவில்லை. இவருக்கு ஆண்மைக்குறைவு இருக்கிறது என்று அழைத்து வந்தார் அவர் மனைவி. கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்ன அந்த புதுமாப்பிள்ளை மனைவியின் பெயரை கேட்ட போது ""தெரியல'' என்று சொல்லி ஷாக் கொடுத்தார். பிறகு, ஆராய்ந்தபோதுதான் அவர் ஒரு பெண்ணை விரும்பியிருக்கிறார். ஆனால், சாதி, குடும்ப கௌரவம் காரணமாக வலுக்கட்டாயமாக வேறொரு பெண்ணுக்கு திரு மணம் செய்துவைத்திருக் கிறார்கள் பெற்றோர்.  

அதனால், மனைவியோடு  வாழ கொஞ்சம்கூட அவருக்கு விருப்பமில்லை. அதனால், பெற்றோர் மீதுள்ள கோபத்தை அதிகமாக குடித்து குடித்து வெளிப்படுத்துவதோடு தாம்பத்யத்துக்கு மறுக்கிறார் என்பது தெரியவந்தது.  இது உளவியல் ரீதியான பிரச்சினை. இவருக்கு, ஆண்மைக்குறைவு என்று சான்றிதழ் கொடுக்க லாமா?  இதேபோல்தான், தலைநிமிர்ந்து ஏறெடுத்துகூட பார்த்துப்பேசாத மிகவும்  அடக்கமான பெண் என்று திருமணம் செய்துவைக்கிறார்கள். ஆனால், நாளடைவில் குடும் பத்தில் உள்ளவர்களிடம்கூட பேசாமல் இருக்கிறாள் புதுப் பெண். ஒருநாள்... மாமனார் ஹாலில் உட்கார்ந்திருக்கும் போதே அவள் அணிந்திருந்த நாப்கினை கொண்டுவந்து வெளியில் வீசுகிறாள். மாமனா ரின் தலையை தட்டிக் கொண்டுபறந்துபோய் விழுகிறது. குழந்தைபோல் இருக்கிறது அவளது நடவடிக்கை.  கணவ னிடம்  உறவு வைத்துக்கொள்ள மறுக்கிறாள். இருவருக்குள்ளும் தாம்பத்ய வாழ்க்கை தடை படுவதற்கு அவள்தான் காரணம். 

ஆனால், அதற்குக் காரணம், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு. ஆனால், இந்த பெண்ணை பெண் மையற்றவள் என்றோ, குழந்தை பெறத் தகுதியானவள் அல்ல என்றோ  சர்டிஃபிகேட் கொடுக்க முடியுமா?  அதுமட்டுமல்ல, ஒரு வருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று கிறது என்றால் உடனடியாக பரி சோதனையில் தெரியாது. இதற்கு விண்டோ பீரியட் என்று சொல் வோம். முதலில் எடுத்த பரிசோத னையில் நெகட்டிவ் என்று இருக் கும். ஆனால், சில நாட்கள் கழித்து பாஸிட்டிவ் என்று காண்பிக்கும். இப்போ, விண்டோ பீரியடின் போது எடுத்த சர்டிஃபிகேட்டை காண்பித்து திரு மணம் செய்துகொள் ளும் ஆண் திருமணத்துக் குப் பிறகு எடுக்கும் போது எச்.ஐ.வி. பாஸிட்டிவ் என்று வந்தால் அவர் ஏமாற்றி விட் டார் என்று சொல்ல முடியுமா? 

ஓர் ஆண், குழந்தைப் பெற தகுதியில்லாத நபர் என்று பரி சோதனை செய்து கண்டுபிடித்து விடலாம். ஆனால், தாம்பத்யம் வைத்துக்கொள்ள தகுதியான வரா இல்லையா என்று பரி சோதனை செய்து முழுமையாக கண்டுபிடிக்க முடியாது. கார ணம், தாம்பத்யம் என்பது வெறும் உடல்சார்ந்த விஷய மல்ல மனம் சார்ந்த விஷயமும். சரி, இதில் அரசின் பங்கு என்ன? இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அரசு மற்றும் ஊடகங்களின் கடமை. இதற்கெல்லாம் ஒரு வரையறை முதலில் வகுக்கவேண்டும். ஜாதக பொருத்தம்... ஜாதி பொருத்தம்... அழகு பொருத்தம்... பொருளா தார பொருத்தம்... இதையெல் லாம் பார்த்துத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று யாரும் சட்டம் போடவில்லை. அதுபோலத்தான், இருவீட்டாரும்  பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். ஆனால், சர்டிஃபிகேட்டை மட்டுமே வைத்துகொண்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம். காரணம், 100-க்கு 100 யாருமே ஃபிட்னஸ் ஆனவர்கள் அல்ல! 

பல்வேறு கருத்துகள் பீறிட் டுக் கிளம்பினாலும் யோக்கிய மான திருமண வாழ்க்கைக்கு பயன்படும் ""ஆரோக்கியமான'' விவாதத்தை உருவாக்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன்.

ad

ad