புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம்: அதிர்ச்சி தகவல்

இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா-அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்க ங்களால் உருவானவை. 

அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்தனர். முடிவில், மியான்மரிலிருந்து இந்தோனேசியா வரையிலுள்ள இந்திய பெருங்கடல் எல்லை தட்டுக்களிலேயே அதிக அளவிலான சுனாமி பேரலைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் இடைவெளிகள் வரை இந்திய பெருங்கடல் பகுதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தட்டுக்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அழுத்தம் ஏற்பட்டு வருவதால் சுமத்ராவில் ஏற்பட்டதை போல 9.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலைகளும் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர்.
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த இல்லை
news
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.

இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான  தமிழர்களை கொன்று குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள்  என்று ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.

ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு  மாகாண முதல்வர் பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான் துணைப்போகமாட்டேன்.  ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை நிறுத்தவேண்டாம்.

நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப் ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு  உறுதிமொழி அளித்துள்ளதாக ஒரு அமைச்சர்  கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும்  றிசாட் பதியுதீன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும் அரசாங்கம் சித்தரிக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf

ad

ad