புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜகன், முதல்வர் ஜெயலலிதா சார்பாக இந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
 
மேலும், சுப்பிரமணியன் சுவாமியின் அந்தக் குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட தமிழ் நாளிதழ் மீதும் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்தக் கடிதத்திற்கு பதில் கடிதமாக சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதத்தில், படகுகள் சசிகலா மற்றும் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
 
இதனையடுத்து அவர் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது

ad

ad