புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

நாளை வரும் சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு! விமான நிலையத்தில் மகிந்த வரவேற்பார்
சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பதோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவேற்க இருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார்.
28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருகிறார்.
அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2ம், 3ம் கட்டங்கள் சீன மற்றும் இலங்கை ஜனாதிபதிகளினால் நாளை திறந்துவைக்கப்பட உள்ளன.
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது 500 ஏக்கர் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெறும். இந்த திட்டம் 1400 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட இருப்பதாக துறைமுக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தது.
கடலை நிரப்பி காலிமுகத்திடலுக்கு அப்பால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு சைனா கொன்ஸ்ட்ரக்சன் கொமுயுனிகேசன் கம்பனி பிரதான முதலீடு மேற்கொள்கிறது.
சீன ஜனாதிபதி இங்கு தங்கியிருக்கும் இரு நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆகியோரை சந்திகிறார்.
இதேவேளை சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வாய்ப்பு இருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.
சீன ஜனாதிபதி 23 மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார்
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் 23 மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார்.
நாளை முற்பகல் 11.30 அளவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள சீன ஜனாதிபதி, நாளை மறுதினம் 10.30 அளவில் இலங்கை விஜயத்தை முடித்து கொள்ள உள்ளார்.
கடந்த 14ம் திகதி மாலைதீவிற்கு விஜயம் செய்த சீன ஜனாதிபதி, நாளை வரையில் மாலைதீவில் தங்கியிருப்பார்.
மாலைதீவு சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து சீன ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad