புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014

சர்வதேச விசாரணையே வேண்டும்; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஜேசுதாஸ் தெரிவித்தார். 


வலி.வடக்கு மக்கள் தங்களை சொந்த இடங்களில் குடியமர்த்தக் கோரி சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தனர் எனினும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலினால் அவை நிறுத்தப்பட்டு அதற்காக போடப்பட்டிருந்த கொட்டகைகளும் அகற்றப்பட்டன.

இதனையடுத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். பாடியில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை பிற்பகல் 2.30 மணிக்கு நடாத்தினர். குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ad

ad