புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

இலங்கை அகதிகள் ஆந்திர மாநிலத்தை பயன்படுத்தி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க வேண்டும்: சின்னராஜப்பா

இலங்கை அகதி கோரிக்கையாளர்கள் ஆந்திர மாநிலத்தைப் பயன்படுத்தி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான சின்னராஜப்பா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் பிரகாசம் என்னும் கரையோரப் பரப்பை பயன்படுத்தி இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சிக்கின்றனர்.
இதனை தடுப்பதற்கு அதிகளவான கரையோர பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்,கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையிலிருந்து அகதிக் கோரிக்கையாளர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்தே அதிகளவான இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற 157 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் காரணமாக பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad