புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு இன்று அழைப்பு?

டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம் ஆத்மி– 28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றன.


மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை என்பதால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்– மந்திரியாகி ஆட்சி அமைத்தார். ஆனால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி அவர் ஆட்சியில் இருந்து 49 நாட்களில் விலகினார்.

இதையடுத்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்த கோரி கடந்த மாதம் 5–ந்தேதி சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. இது தொடர்பாக மத்திய அரசு 5 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் எம்.பி.க்களாகி விட்டதால் சட்டசபையில் தற்போது 67 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.

எனவே 34 எம்.எல்.ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணிக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம், மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. ஆட்சியில் அமர மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க. தலைவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. எனவே டெல்லியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்யும் என்று தெரியவந்துள்ளது. அந்த பதிலில் டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.கவை கவர்னர் நஜீப்ஜவ் அழைப்பார் என்று கூறும் என தெரிகிறது.

இதையடுத்து பா.ஜ.கவை ஆட்சி அமைக்க வருமாறு டெல்லி கவர்னர் நஜீப்ஜவ் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கவர்னர் அழைப்புக்காக ஆவளுடன் காத்து இருப்பதாக டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ad

ad