புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014





""ஹலோ தலைவரே.. … இந்திய அரசியல் முகாமே தமிழ்நாட்டைத் தான் உற்றுப் பார்க்குது. இது சாதனையல்ல… வேதனைன்னுதான் சொல்லணும். 2ஜி கேஸில் கைதான ஆ.ராசா, அப்புறம் கனிமொழி. அதையடுத்து சொத்துக் குவிப்பு கேஸில் தீர்ப்பை எதிர்நோக்கும் ஜெயலலிதா, இப்ப ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தின் குற்றப்பத்திரிகையில் மாட்டியுள்ள தயாநிதிமாறன் அவ ரோட அண்ணன் சன் டி.வி. கலாநிதிமாறன்னு தேசிய அளவில் தமிழகத்துப் பிரமுகர்கள் கவனத்தை கவர்ந்திருக்காங்க.''

""ஏர்செல் நிறுவனத்தோட ஓனர் சிவசங்கரன் 2ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டப்ப ஒதுக்காத அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவனத்தை மலேசியா வோட மேக்ஸிஸ் ஓனர் அனந்தகிருஷ்ணன் வாங்கியதும் வேக வேகமா ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினாருன்னும், அதற்காக சன் நெட்வொர்க்கில் மேக்ஸிஸ் நிறுவனத்தின் பணம் முதலீடானதும்ங்கிறதுதானே குற்றச் சாட்டு?''

""ஆமாங்க தலைவரே.. முழு விசாரணை முடியாததால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாரு தயாநிதி மாறன். ஆனாலும் இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதித்த சுப்ரீம் கோர்ட், குற்றப்பத்திரிகையோட தன்மையைப் பார்த்து மேற்கொண்டு முடிவு செய்வதா சொல்லிடிச்சி. ஆனாலும் மத்திய ஆட்சியில் தனக்கு இருக்கிற தொடர்புகள் மூலமா எப்படியாவது குற்றப்பத்திரிகை தாக்கலை தடுத்து நிறுத்த மோடி ஆட்சி அமைஞ்சதிலிருந்தே தயாநிதி மாறன் முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருந்தாரு. அமைச்சரவையில் இரண்டாவது இடத் திலே இருக்கிற அருண்ஜெட்லி, முக்கியப் பொறுப்பில் இருக்கிற சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இருவரோட மொபைல் களைப் பார்த்த பா.ஜ.க சீனியர்கள் தயாநிதியோட தளராத முயற்சிகள் பற்றி சொல்றாங்க. அந்தளவுக்கு அதிக தடவை கால் பண்ணி, மந்திரிகள் எடுக்காததால தொடர்ச்சியா மெசேஜ் பண்ணியிருக்காரு. ஆனா, பா.ஜ.க தரப்பு கைகொடுக்கலை.'' 

""ஆகஸ்ட் 29ந் தேதியன்னைக்கு ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பா டெல்லி ஸ்பெஷல் கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. ஷைனிகிட்டே குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செஞ்சிடிச்சே.. ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகள்படியும், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவான 120பி, அதாவது கிரிமினல் சதிங்கிற அடிப்படை யிலும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரோட அண்ணன் சன் டி.வி. கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல், இறந்துபோயிட்ட டெலிகாம் முன்னாள் செகரட்டரி ஜே.எஸ்.சர்மா இவங்களெல்லாம் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்காங்க. அதோடு சன் டிஜிட்டல், மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, மொரிஷியஸில் உள்ள சவுத் இந்தியா என்டர்டெய்ன்மெண்ட் ஹோல்டிங் லிமிட்டெட் நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்குதுப்பா. டீடெய்ல்ஸெல்லாம் பார்த்தேன்.''

""எவ்வளவோ முயற்சி செய்தும் குற்றப்பத்திரிகை தாக்கலைத் தடுக்க முடியலையேங்கிற அப்செட்டில் கலாநிதி மாறன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டாரு. அங்கிருந்து தான் லீகல் டிஸ்கஷன்களை நடத்திக்கிட்டிருக்காராம். தயாநிதி மாறன் டெல்லியில் கேம்ப் அடிச்சி சட்ட வல்லுநர்களைப் பார்த்துக்கிட்டிருக்காரு. குற்றப்பத்திரிகை தாக்கலானதால அடுத்தது அரெஸ்ட்தான்னு சட்ட வட்டாரத்தில் பேசப்படுது.'' 

""மாறன் சகோதரர்கள் இருவரும் கைதாவாங்களாங்கிறது மில்லியன் டாலர் கேள்வியா இருக்குதே?''

""ஆகஸ்ட் 29-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல், செப்டம்பர் 2-ந் தேதி அடுத்த கட்ட விசாரணைன்னு தொடர்ந்தப்பவும் நேரில் ஆஜராகவேண்டிய சூழல் வரலை. நேரில் ஆஜராக சம்மன் அனுப் பியதும் அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்கும்னு சட்டம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. கனிமொழிக்கு இதே கோர்ட்டிலிருந்து சம்மன் வந்தப்ப, சோனியாகாந்தியை கலைஞரே சந்திச்சிப் பேசினாரு. அப்பியரன்ஸ்தான், அரெஸ்ட் இருக்காதுன்னு சோனியா தரப்பிலிருந்து சொல்லப்பட்டிச்சி. அப்புறம், டி.ஆர்.பாலு சோனியாவை சந்திச்சப்பவும் இதே பதில்தான் வந்தது. ஆனா, கனிமொழி ஆஜரானப்ப அவரை ரிமாண்டு செஞ்சி திகார் ஜெயிலுக்கு அனுப்பிடிச்சி டெல்லி கோர்ட்டு. தி.மு.க தலைமை பதறிப்போய் சோனியா தரப்பில் விசாரிச்சப்ப, டெல்லியிலே ஜூடிஷியல் நடைமுறை இதுதான்னு நம்ம சட்ட வல்லுநர்கள் சொல்றாங்கன்னு ரொம்ப ஈஸியா காங்கிரஸ் மேலிடம் கை விரிச்சிடிச்சி.'' 

""அதேநேரத்தில், மெடிக்கல் காலேஜ்களில் கூடுதல் இடங்கள் அனுமதி தொடர்பா முன்னாள் மத்திய மந்திரி அன்புமணிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய விவ காரத்திலே அவருக்கு ஜாமீன் கிடைச்சிருக்குதே?''

""உள்துறை அமைச் சர் ராஜ்நாத்சிங்கிட்டே பா.ம.க தரப்பு பேச, இதையடுத்து ஸ்பெஷல் கோர்ட்டில் சி.பி.ஐ நோ அப்ஜெக்ஷன் சொன்ன தால அன்புமணிக்கு ஜாமீன் கிடைச்சிது. மாறன் சகோதரர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், இன்னும் விசாரணை நடத்தி கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வோம்னு சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் சொல்லியிருக்குது. இப்ப டித்தான் ஆ.ராசாவை அரெஸ்ட் பண்ணுன பிறகு, 2ஜி விவகாரத்திலே கலைஞர் டி.வி சம் பந்தமா கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செஞ்சி அதிலே கனி மொழியை கைது பண்ணு னாங்க. சகோதரர்கள் விவகாரமும் அப்படித் தான் போய்க்கிட்டிருக்குது. 2ஜி கேஸில் விசாரணை முடிகிற வரைக்கும் பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது. அப்புறம்தான் ஒவ் வொருத்தருக்கா பெயில் கிடைச்சி, கனிமொழிக்கு கிடைச் சுது. எல்லாருக்கும் பிறகுதான் ஆ.ராசா பெயில் பெட்டிஷன் போட்டாரு.'' 

""எம்.பி. தேர்தல் சமயத்தில் சன் டிவியில் பா.ஜ.கவோட தாமரை சின்னத்துக்கு ஓட்டுக் கேட்கும் விளம்பரத்தை யெல்லாம் ஒளிபரப்பினாங்களே, மோடி அரசாங்கம் இப்ப எந்த உதவியும் செய்யலையா?''

""அதெல்லாம் தொழில் சம்பந்தப்பட்டது. இந்த கேஸை பொறுத்தவரைக்கும், ஆரம் பத்திலே போதிய ஆதார மில்லைன்னுதானே சி.பி.ஐ டைரக்டர் சொன்னாரு. அப்புறம் அட்டர்னி ஜெனரல் தன்னோட ஒப்பீனியனில் இந்த ஆதாரங்களே போதும்னு சொன்னப்புறம்தானே குற்றப்பத்திரிகை தாக்கலாகி யிருக்குது. இதுக்குக் காரணம் பிரதமரோட முதன்மைச் செய லாளர் நிர்பேந்திர மிஸ்ராதான். தயாநிதி மந்திரியா இருந்தப்ப அவர்தான் டெலிகாம் செகரட்டரி. அப்ப தயாநிதி தன்னை ரொம்ப அவமானப்படுத்திட்டதா நிர்பேந்திர மிஸ்ராவுக்கு வருத்தம். அதனால இந்த கேஸை விடக்கூடாதுன்னு பிடியா நிக்கிறாரு. பிரதமர் அலு வலகமும் கேஸை ஸ்ட்ராங்க் பண்ண முழு ஒத்துழைப்பு கொடுக்குது.''

""ஏர்செல் முன்னாள் ஓனர் சிவசங்கரன் கொடுத்த புகாரிலேதான் மாறன் சகோதரர்கள் மேலே கேஸே போடப்பட்டது. அந்த சிவசங்கரன் இப்ப பிசினஸ் நொடிச்சிப்போயி ஸ்விட்சர்லாந்தில் இருக்காரு. தனக்கு பொருளாதார ரீதியா ஹெல்ப் பண்ணச் சொல்லியும், தொகையை கடனா கொடுத்தா போதும்னும் அப்படி செஞ்சா புகாரை வாபஸ் வாங்கிக்கிற தாகவும் போன மாதம் சிவசங்க ரன் தூது விட்டிருந்திருக்காரு. மாறன் சகோதரர்கள் இந்த டீலிங்குக்கு ஒத்துக்கலையாம். இப்ப அவங்க படுறபாட்டை ஸ்விட்சர்லாந்தில் இருந்தபடி தெரிஞ்சிக்கிட்டு, அப்பவே சொன்னேன் கேட்கலைங்கிறா ராம் சிவசங்கரன். இது எனக்கு கிடைச்ச தகவல். தி.மு.க தலைமை இந்த கேஸ் போற போக்கைப் பற்றி என்ன சொல்லுது?''

""அறிவாலயத்தில் அதிர்ச்சி யோ ஆச்சரியமோ தெரியலை. தேர்தல் சமயத்தில் கலைஞரை தயாநிதிமாறன் சந்திச்சப்ப, தேர்தல் செலவுக்குக்கூட தன்னோட அண் ணன் எதுவும் தரலைன்னும், கேஸ் விஷயமாகவும் தான்தான் அலைவ தாகவும் அப்செட்டா சொல்லி யிருக்காரு. இப்ப பிரதர்ஸோட கோ-ஆபரேஷன் எந்தளவில் இருக் குதுன்னு தெரியலை.''

""கஷ்டநேரத்தில் விட்டுக் கொடுப்பாங்களா?''

""ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கால ஷேர் மார்க்கெட்டில் சன் நெட் வோர்க்கோட மதிப்பு குறைஞ்சிடிச்சி. அதோடு, சன் டிஜிட்டலை ரிலையன்ஸ் அனில் அம்பானிகிட்டே கொடுத்திட கலாநிதி மாறன் ஏற்கனவே ப்ளான் பண்ணியிருந்தாரு. ஆனா, தயாநிதி மந்திரியா இருந்தப்ப அனிலோடும் முட்டல் மோதல்ங் கிறதால அவர் பிடி கொடுக்கலை. இதற்கிடையிலே சன் நெட்வொர்க் கோட சர்வீசான கல் நிறுவனத்தோட உரிமத்தை மத்திய அரசு ரத்து செஞ்சதால பிசினஸில் மேலும் மேலும் அடி. 2ஜி கேஸில் ஷாகித் பால்வாவோட நிறுவனங்களையும் சொத்துகளையும் அட்டாச் செய்தமாதிரி இந்த கேஸில் சன் நெட்வொர்க் சொத்துக்களை அட்டாச் செய்திடுவாங் களோன்னு கலாநிதி மாறன் படுஅப்செட். தயாநிதிமாறனோ, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கேஸ்தான் சிக்கலானது. ஏர்செல்-மேக்ஸிஸ் கேஸ் ரொம்ப வீக், தப்பிச்சிடலாம்னு நம்பிக்கையா சொல்றாராம்.''

""செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கிற ஜெ. உள்ளிட்ட நாலு பேர் மீதான சொத் துக் குவிப்பு வழக்கு பற்றி புதுத்தகவல் கள் உண்டா?''

""நீதிபதி குன்ஹாவோட தீர்ப்புக்கு எப் படியாவது தடை வாங் கிடணும்னு ஜெ. விரும்பு றது பற்றி, பிரதமர் மோடிகிட்டே சட்ட அமைச் சர் ரவிசங்கர் பிரசாத் சொல்லியிருக் காரு. ஊழல் வழக்குகளில் ஹைகோர்ட்டுகளும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்ட்ரிக்ட்டா இருப்பதைப் பற்றியும் இருவரும் பேசியிருக்காங்க. ஜெ.வை பொறுத்தவரை, கூட்டுசதிங்கிற வார்த்தைக்கு எதிரா கர்நாடக ஹைகோர்ட்டில் போட்டிருக்கிற கேஸைத்தான் இப்போ தைக்கு நம்புறாரு. இறுதித் தீர்ப்புக்கு முன்னாடி இது சம்பந்தமா தீர்ப்பு கொடுக்கணும்னு நீதிபதி குன்ஹாவுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டாலே அந்தத் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனடிப் படையில் இறுதித் தீர்ப்பை தள்ளிப்போட வச்சிடலாம்னு பலரும் சட்ட ஆலோசனைகள் சொல்லியிருக்காங்களாம். அதோடு, பெங்களூரிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் சென் னைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிச்சிக்கிட்டி ருக்குதாம். எல்லாமே கேஸ் சம்பந்தமாகத்தான்.''

""பல இழுத்தடிப்புகளுக்கு நடுவிலும் வழக்கை விசாரித்து தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிபதி என்ன செய்துக்கிட்டிருக்காரு?''

""அதை நான் சொல்றேன். ஆகஸ்ட் 30-ந் தேதியே இந்த வழக்கோட தீர்ப்பு சம் பந்தமான வேலைகளை நீதிபதி தொடங்கிட்டாராம். கோர்ட் ஊழியர்கள் யாரும் 20 நாளைக்கு லீவு போடக் கூடாதுன்னு உத்தரவாம். வெளியாட் கள் உள்ளே நுழையாத படி கண் காணிப்பும் தீவிரப்படுத் தப்பட்டிருக் குது. தமிழக முதலமைச்ச ரான ஜெ., பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜராகணும்ங்கிற தால உரிய பாதுகாப்பு ஏற் பாடுகளை செய்யும்படி கர்நா டக அரசுக்கு நீதிபதி உத்தர விட்டிருக்காரு. ஓரிரு நாட் களில் இதுபற்றி கர்நாடக மாநில சட்டத்துறையும் போலீஸ் உயரதிகாரிகளும் கலந்தாலோசித்து உரிய ஏற் பாடுகளை செய்வாங்களாம்.''

ad

ad