புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

பாக்., உளவாளி அருண் செல்வராஜனை காவலில் எடுத்து
 விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு

பாகிஸ்தானுக்காக தமிழ்நாட்டில் ஊடுருவி, உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டார். மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழகத்தில் 20 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நடத்துவதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தகவல்களை சேகரித்து வருவது தெரியவந்தது.

அருண் செல்வராஜன் தமிழகத்தின் முக்கிய இடங்களைப் புகைப்படம் எடுத்துள்ளார். முக்கிய இடங்களின் வரைபடங்களையும் அதிகாரிகள் அவரிடமிருந்து கைப்பற்றினர்.

சென்னையில் இருந்தவாறு அவர் ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களை உளவு பார்த்து வந்துள்ளார். இந்த நகரங்களில் தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக 30க்கும் மேற்பட்ட முறை அந்த இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நகரங்களில் உள்ள முக்கிய இடங்களையும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

இவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதன் மூலம், பல்வேறு தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அருண் செல்வராஜனை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்து உள்ளனர். வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப டுகிறார். அப்போது இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ad

ad