புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014



விஜயின் கத்தி படும் பாடு 

ராஜபக்சேவோட தோஸ்த்து துட்டுல தயாரிக் கிறாங்களாம், போஸ்டர் -டீஸர்லாம் இங்கிலீஷ் பட காப்பியாம், ஆடுதாம், அசையுதாம்... இப்படி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸின் "கத்தி' படம் பற்றி பல செய்திகள் சுற்றிவர... கதைத் திருட்டு வழக்கும் "கத்தி'யை வளைத்துக்கொண்டிருக்கிறது.

டீஸர்!

"கருப்பர் நகரம்' என்கிற படத்தை இயக்கிவரும் புதுமுக டைரக்டர் ந.கோபி, கடந்த ஏப்ரல் மாதம் நம்மைச் சந்தித்தார். ""விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிவரும் "கத்தி' படம் பற்றி வருகிற செய்திகளைப் பார்க்கும்போது... அது நான் எழுதிய கதையை முருகதாஸ் திருடிக் கொண்டதுபோல் இருக்கிறது. இது சம்பந்தமாக நான் முருகதாஸிற்கு நோட்டீஸ் அனுப்பினேன், வக்கீல் சங்கரசுப்பு மூலம். ஆனால் "கோபியை யாரென்றே தெரியாது' என பதிலனுப்பியிருக்கார் முருகதாஸ்'' என தெரிவித்த கோபி... தான் எழுதிய கதையையும், அதை முருகதாஸிடம் சொன்னதையும் நம்மிடம் தெரிவித்தார். "கத்தி'யின் கதை என்ன என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியாதபட்சத்தில் யூகமாக "கதைத் திருட்டு' செய்தி வெளியிட முடியாது... என் பதை கோபியிடம் தெரிவித் தோம்.

இந்நிலையில்...

"என்னுடைய கதை யையும், ஏ.ஆர்.முருகதாஸின் கதையையும் ஒப்பிட்டுப் பார்க்க "வக்கீல் கமி­ன்' அமைக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார் கோபி. இதையடுத்து "வக்கீல் கமி­ன்' அமைக்க உத்தர விட்டது உயர்நீதிமன்றம்.

ட்ரெய்லர்!

ந.கோபி சொல்கிறார்...

""தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் ("ஆஸ்கர்' ரவிச்சந்திரனின் சகோதரர்) "மூத்தகுடி' என்கிற கதையை 2008-ல் சொன்னேன். அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் கதை இலாகாவைச் சேர்ந்த ஜெகன் அங்கிருந்தார். "கதை நல்லாருக்கு. முருகதாஸே இதை தயாரிப்பார் என்றதால் அவர்மூலம் சந்தித்தேன். முருகதாஸ் என் கையைப் பிடித்து குலுக்கி "நீங்க சொன்ன கதையில் அந்தப் பன்றி வேட்டை ஸீன் அற்புதமா இருந்துச்சு' என்றார். அதாவது... நான் ஜெகனிடம் சொன்ன கதையை முருகதாஸிடம் ஜெகன் சொல்லியிருக்கிறார்.

மெயின் பிக்ஸர்!

பன்னாட்டுக் கம்பெனி ஒன்று ஒரு கிராமத்தின் நிலத்தடியில் கனிம வளம், நீர்வளம் என இயற்கை வளம் இருப்பதைக் கண்டறிந்து அந்த விவசாய நிலங்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிடுகிறது. நாளடைவில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட... அவர்களை அதிகார துணையோடு அடக்கி சொந்த மண்ணிலேயே அகதிகளாக்குகிறது. அகதி முகாம் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருக்கும். ஒரு அனுபவஸ்தரின் வழிகாட்டுதலின்படி ஒரு இளைஞன் அந்த நிலங்களை மீட்பதாக கதை செய்திருந்தேன்.  ராஜ்கிரணை மனதில் வைத்து உருவாக்கிய கேரக்டரை மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சாயலில் அமைத்தேன். இதற்காக நம்மாழ்வாரையும் அவ்வப்போது சந்தித்துப் பேசினேன்.

"ராஜ்கிரண் கேரக்டர் வேண்டாம், ஹீரோவே நிலத்தை மீட்பது போல் மாற்றுங்கள்' என்றார் முருகதாஸ். அதன்படி திரைக்கதையில் மாற்றம் செய்து ஆர்யாவை மனதில் வைத்து ஒன்லைன் அமைத்தேன். அதை வாங்கிக்கொண்டார்கள்.

"இதை அஜீத்துக்கு தகுந்த மாதிரி மாத்தித் தர முடியுமா?' என கேட்டார்கள். அஜீத்திற்காக சிந்தித்து டபுள் ஆக்­ன் ஹீரோ கதையாக மாற்றி எழுதிக் கொடுத்தேன். 3 மணி நேரம் ஃப்ரேம் ஃப்ரேமாக ரெகார்டரிலும் பதிவு செய்து தந்தேன். 

நம்மாழ்வாரை, முருகதாஸின் உதவியாளர் சந்தித்துவிட்டுப் போனதாக எனக்குத் தகவல் கிடைக்கவும் விஸ்வாஸ் சுந்தருக்கு போன் செய்து நியாயம் கேட்டேன். பின்னர் ஜெகன் என்னைத் தொடர்புகொண்டு "வேணும்னா கோர்ட்டுக்குப் போங்க' என்றார் அலட்சியமாக.

முருகதாஸின் படம் பற்றி வெளியான தகவல்கள்... நான் சொன்ன கதையாகவே இருந்தது.

டபுள் ஆக்­னில் ஒருவன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன். ஒரு கேரக்டர் கொல்கத்தாவில் அறிமுகமாகும், இன்னொரு கேரக்டர் சென்னை சென்ட்ரலில் அறிமுகமாகும். சென்னைக்கு தப்பிவரும் கெட்டவன் கேரக்டரை துரத்திவரும் வில்லன்கள், தவறுதலாக நல்லவனை தூக்கிச் செல்வார்கள். ஆற்றுப்படுகைகளில் கதைச் சம்பவம் நிகழுதல். இறுதியில் நீதிமன்றம் முன்... நம்நாட்டில் உள்ள கனிமவளங்கள் குறித்து விரிவான புள்ளிவிபரம் சொல்வார் ஹீரோ. எனது இந்தக் கதைச் சிறப்புகள் முருகதாஸ் படத்திலும் இருப்பதாகத் தெரியவந்ததால் நான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்'' என அப்போது சொன்னார் கோபி.

க்ளைமாக்ஸ்!

ந.கோபியின் "என் கதை' வழக்கை ஏற்று "வக்கீல் கமி­ன்' அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்... பதில் மனுவை வக்கீல் சதீஷ் பராசரன் மூலம் தாக்கல் செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வழக்கு விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார் நீதிபதி கே.கணேசன்.

"கத்தி'ச் சண்டை... அர்த்தமுள்ள கத்திச் சண்டையா? அட்டக்கத்தி சண்டையா?

விரைவில் தெரியவரும்!

ad

ad