புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


அருண் செல்வராஜா விடுதலைப் புலிகளின் உறுப்பினராகவும் செயற்பட்டார்- இந்திய ஊடகம்
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது
செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழரான அருண் செல்வராஜா, விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் அவர் சென்னையில் வைத்து கைதான பின்னர் நேற்று வெளியான செய்திகளின்படி அவருக்கு இலங்கையிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று வெளியாகியுள்ள செய்தியில் அவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி அருண் செல்வராஜா பாகிஸ்தானிய ஐஎஸ்ஐ உளவுப் பிரிவுக்கு முக்கியமான சொத்தாக செயற்பட்டுள்ளார்.
அவர் ஐஎஸ்ஐக்காக உளவு பணிகளில் மாத்திரம் ஈடுபடாமல், பயங்கரவாத தாக்குதல்களுக்கான தயார்படுத்தலுக்கும் உதவியளித்துள்ளார்.
குறிப்பாக அவர் கல்பாக்கம் அணுஉலை, கோயம்புத்தூர் சந்தை மற்றும் விமான பயிற்சி நிலையம் என்பவை தொடர்பில் தகவல்களை திரட்டியிருந்தார்.
அவர், கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து லெப்டொப், எப்பல் ஐபேட், 6 கைத்தொலைபேசிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் இரண்டில் ஒன்றில் இலங்கையர் என்றும் மற்றதில் இந்தியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கடவுச்சீட்டில் அவருடைய பெயர் சரவணமுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அருண் செல்வராஜா, கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரியான அமிர் ஸுபைர் சித்தீக்கினால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மற்றும் ஒரு பாகிஸ்தானிய அதிகாரியினாலேயே அவர் வழிநடத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பாகிஸ்தானிய நிதியுதவியில் அருண் செல்வராஜா, இந்தியாவில் ஐசி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அங்கிருந்து முன்னணி பாடகர் ஜேசுதாஸ் போன்றோரின் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் நிர்வாக அதிகாரிகளுடனும் அவர் தொடர்புகளை பேணிவந்துள்ளார்.
இந்தநிலையில் விசாரணைக்குழு ஒன்று அவர் தொடர்பில் இலங்கைக்கு சென்று விசாரணைகளை நடத்தவுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் பாகிஸ்தானுக்கான உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் 2013 ஆம் ஆண்டில் இருந்து அருண் செல்வராஜாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவு வலையமைப்பை கண்டறிய இலங்கையின் உதவியை எதிர்பார்க்கும் இந்திய புலனாய்வாளர்கள்
இந்தியாவுடன் தொடர்புடைய இலங்கையர்கள் பயன்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடாக இயங்கும் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கும் வலையமைப்பு தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்து அதிகாரிகளை சந்திக்க இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான உளவு பணியில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உளவு பணிகளில் ஈடுபடும் வலையமைப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் போர்வையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் நோக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் செல்வராஜன் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதை அடுத்து செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற தாக்குதலை தென்னிந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உளவு வலைமையமைப்பை கண்டறிய இலங்கையின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாக தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு இலங்கை வெளிவிகார அமைச்சு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ad

ad