புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

கொக்குவில் பொற்பதி வி.கழகத்தின் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டி சென். மேரிஸ்- றோயல் இன்று மோதல்

கொக்குவில் பொற்பதி விளையாட்டுக்கழகம் நடத்தி வரும் 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இவ் இறுதிப் போட்டியில்  ஊரெழு றோயல் அணியை எதிர்த்து சென். மேரிஸ் அணி மோதவுள்ளது.

நேற்று  முன்தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மயிலங்காடு ஞான முருகன் அணியை எதிர்த்து நாவாந்துறை சென். மேரிஸ் அணி மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக இடம் பெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின .

இறுதியில்  சென். மேரிஸ் அணி வீரர் ஜெனந் தனது அணிக்காக முதலாவது கோலை பெற்றுக் கொடுத்தார். பின்னர் அபாரமாக விளையாடிய ஞானமுருகன் அணியும் பதி லுக்கு ஒரு கோலினை போட்டது.

இடைவேளையின் பின்னர் பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் சென். மேரிஸ் அணி வீரர் யூட் தனது அணிக்காக இரண்டாவது கோலினை பெற்றுக் கொடுத்தார்.

இறுதி வரை போராடிய ஞானமுருகன் அணி மேலதிக கோலை போட முடியாது போக இறுதியில் சென். மேரிஸ் அணி  2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து சென். மேரிஸ் அணி  மோதவுள்ளது.    

ad

ad