புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

ஐ.நா. விசாரணையை நிராகரிப்பதால் இலங்கை அரசாங்கம் சிக்கலுக்குள்ளாகும் பிரிட்டன் நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை


ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காதுவிட்டால் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம் பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐ.நாவும், மேற்கத்தேய நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இந்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பில் தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணையை நிராகரித்து வருவதை கண்டிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ள தமிழர்களுக்கான பிரித் தானியாவின் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு, இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்காக தடைகள் உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளையும் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னரும்  இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், அதனை நிராகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர்களுக்கான பிரித்தானி யாவின் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான கொன்சவேர்டிவ் கட்சியைச் சேர்ந்த லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.நாவின் புதிய மனிதவுரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றுள்ள தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மற்றும் ஐ.நா விசாரணைகளில் சாட்சியமளிப் பவர்களை நாடுகடத்துவதை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகாமையாளரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டேன்; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
news கோண்டாவிலில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த நிறுவன முகாமையாளர் மீது குற்றம் சாட்டி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை நேற்று பதிவு செய்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=240293429015317895#sthash.vdcOzMhV.dpuf

ad

ad