புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

புதிய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி
ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக கடந்த 4ம் திகதி பொறுப்­பேற்றுக் கொண்ட ஜோர்தான் இள­வ­ரசர் சையிட் அல் ஹுசேன், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிகழ்த்­திய முதல் உரை­யி­ லேயே, இலங்கை அர­சாங்­கத்­துக்கு அதிர்ச்­சியைக் கொடுத்­தி­ருக்­கிறார். அவர் தனது உரையில் இலங்கை தொடர்­பாகத் தெரி­வித்த சில கருத்­துகள் அர­சாங்­கத்­தினால் உடன்­படக் கூடி­ய­வை­யல்ல.
முத­லா­வது, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணைக்கு இலங்கை ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.
இரண்­டா­வது, மனித உரிமை ஆர்­வ­லர்கள், சாட்­சிகள், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்.
மூன்­றா­வது, முஸ்லிம் மற்றும், கிறிஸ்­தவ மக்கள் அச்­சு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்.
இவை தவிர, முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் செயல்­மு­றை­களைப் பாராட்டி அவ­ரது வழி­யையே தாமும் பின்­பற்றப் போவ­தா­கவும் தனது கன்னி உரையில் தெரி­வித்­தி­ருந்தார் சையிட் அல் ஹுசேன்.
கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக இருந்த நவ­நீ­தம்­பிள்­ளைக்கு எதி­ராக, இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான குற்­றச்­சாட்டு­க்களைச் சுமத்தி வந்­தது.
நவ­நீ­தம்­பிள்ளை பார­பட்­ச­மா­கவும், அநீ­தி­யா­கவும் செயற்­ப­டு­கிறார் என்­பது இலங்கை அர­சாங்­கத்தின் நீண்­டநாள் குற்­றச்­சாட்டு. இலங்­கை போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மீறல்­களை விசா­ரிப்­ப­தற்­கான ஐ.நா.வின் எல்லா முயற்­சி­க­ளை­யுமே, கேலிக்­கூத்து என்று காண்­பிக்க முனைந்­தது அர­சாங்கம்.
இதன்­மூலம் நவ­நீ­தம்­பிள்ளை, அநீ­தி­யான முறையில், இலங்­கையைத் தண்­டிக்க முனை­வ­தாக காட்ட அர­சாங்கம் முனைந்­தி­ருந்­தது.
அந்த முயற்­சி­க­ளெல்லாம் தோல்­வி­யுற்று, இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில் தான் நவ­நீ­தம்­பிள்ளை தனது பத­வி­யி­லி­ருந்து கடந்த மாத இறு­தி­யுடன் ஓய்வு பெற்­றி­ருந்தார்.
நவ­நீ­தம்­பிள்­ளைக்கு அடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பத­விக்கு தெரிவு செய்­யப்­பட்ட, ஜோர்தான் இள­வ­ரசர் சையிட் ராட் அல் ஹூசேன், மீது இலங்கை அர­சாங்கம் முன்னர் அதி­க­மான நம்­பிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது.
நவ­நீ­தம்­பிள்­ளையைப் போல பக்­கச்­சார்­புடன் செயற்­ப­ட­மாட்டார் என்றும், இலங்கை விவ­கா­ரத்தில் அவர் நியா­ய­மாக நடந்து கொள்வார் என்றும், அர­சாங்க அமைச்­சர்கள் கருத்­துக்­களை வெளியிட்­டி­ருந்­தனர்.
தற்­போது, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும், இலங்­கைக்கு எதி­ரான விசா­ர­ணைகள் விட­யத்தில் நீக்குப் போக்­குடன் செயற்­ப­டுவார் என்றே அர­சாங்கம் எதிர்­பார்த்­தி­ருந்­தது.
ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய வழங்­கப்­பட்ட ஆணையின் படி உரு­வாக்­கப்­பட்ட ஒரு விசா­ரணைக் குழுவை, புதிய ஆணை­யா­ள­ராக ஒரு­போதும் கலைத்து விடவோ, அதன் விசா­ர­ணை­களை நிறுத்தி வைக்­கவோ முடி­யாது.
ஏற்­கனவே இருந்த ஆணை­யாளர் தொடங்­கிய விசா­ர­ணையை தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்­டி­யது புதிய ஆணை­யா­ளரின் கடப்­பாடு.
புதிய ஆணை­யா­ள­ராக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவோ, கோத்­தா­பய ராஜபக்சவோ கூட இருந்­தாலும் இதையே தான் செய்ய முடியும். செய்ய வேண்டும். ஏனென்றால், இது ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை.
அதனை நிறை­வேற்ற வேண்­டி­யது, மனித உரிமை ஆணை­யா­ளரின் கடப்­பாடு. இதனைப் புரிந்து கொள்­ளாமல் தான் அமைச்­சர்கள் பலரும், புதிய ஆணை­யாளர் குறித்து நம்­பிக்கை வெளி­யிட்­டனர்.
இப்­போது, என்­ன­வென்றால், புதிய ஆணை­யாளர் சையிட் அல் ஹூசேன், தானும், நவ­நீ­தம்­பிள்­ளையின் வழி­யி­லேயே செயற்­படப் போவ­தாக தனது முதல் உரை­யி­லேயே கூறி­யி­ருப்­பது, இலங்­கைக்குப் பேர­திர்ச்­சி­யா­கவே இருக்கும்.
ஏனென்றால், நவ­நீ­தம்­பிள்­ளையை பக்­கச்­சார்­பா­னவர் என்று இலங்கை அர­சாங்கம், கூறிய குற்­றச்­சாட்­டுக்கு, அவர் ஒரு தமிழர் என்ற கார­ணத்­தையும் முன் ­வைத்­தது. ஆனால், சையிட் அல் ஹூசேன், அவ்­வாறு குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­வ­தற்கு அவர் ஒரு தமிழர் அல்ல.
அதை­விட, இலங்கை விவ­கா­ரத்­திலோ, தமிழர் பிரச்­சி­னை­யிலோ இதற்கு முன் எந்­த­வ­கை­யிலும் தொடர்­பு­பட்­ட­வரும் அல்ல. எனவே, சையிட் அல் ஹூசேனை புலி என்றோ, புலி ஆத­ர­வாளர் என்றோ கார­ணத்தை வைத்து, அவர் பக்­கச்­சார்­பாகச் செயற்­ப­டு­கிறார் என்று குற்­றஞ்­சாட்ட முடி­யாது.
அவ்­வா­றான குற்­றச்­சாட்டை அர­சாங்கம் முன்­வைத்தால், அது அர­சாங்­கத்­தையே திருப்பித்தாக்கும். ஏனென்றால், இலங்­கையின் நட்பு நாடுகள் கூட இதனை நம்பப் போவ­தில்லை.
நவ­நீ­தம்­பிள்­ளையை இலங்கை அர­சாங்கம் பக்­க­ச்சார்­பு­டை­யவர் என்று குற்­றஞ்­சாட்­டிய போது கூட, அதனை சர்­வ­தேச சமூகம் ஏற்றுக் கொள்­ள­வில்லை.
எனவே, சையிட் அல் ஹூசேன் விட­யத்தில் அர­சாங்கம் அவ்­வ­ளவு இல­கு­வாக அவரைப் புலி­யென்றோ, பக்­க­சார்பு­டை­யவர் என்றோ பிர­சா­ரப்­ப­டுத்த முனை­யாது.
எவ்­வா­றா­யினும், நவ­நீ­தம்­பிள்­ளையின் வழியை பின்­பற்றப் போவ­தாக அவர் அறி­வித்­தி­ருப்­பதும், ஐ.நா விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு அவர் கோரி­யி­ருப்­பதும், இலங்­கையின் மனித உரி­மைகள் நிலை குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள கருத்­து­களும், அர­சாங்­கத்தை நிச்­சயம் மிரளச் செய்யக் கூடி­யவை.
இந்­த­நிலை நீடிக்­கு­மே­யானால், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யுடன், இலங்கை அர­சாங்கம் நீடித்த மோத­லுக்குச் செல்ல வேண்­டி­யி­ருக்கும்.
அவ்­வாறு தொடர்ந்து ஐ.நா.வுடன் முரண்­பாட்டை வளர்த்துக் கொள்­வது, சர்­வ­தேச அரங்கில் இலங்­கையின் பெயரைப் பெரிதும் கெடுத்து விடும்.
குறிப்­பாக, சிரியா, வட­கொ­ரியா, ஈரான், போன்ற நாடு­க­ளுக்கு இணை­யாக இலங்­கையும் கரு­தப்­ப­டு­கின்ற நிலை ஏற்­பட்டு விடும்.
எனவே, இலங்கை அர­சாங்கம், ஐ.நா. வுடன் ஒத்­து­ழைக்­கின்ற அல்­லது ஒத்­து­ழைப்­பது போன்று காட்டிக் கொள்­கின்ற அள­வுக்­கேனும், தன்னை மாற்றிக் கொள்ள வேண்­டிய நிலை ஒன்று உரு­வா­கி­யுள்­ளது.
கடந்­த ­வாரம் கொழும்பு வந்­தி­ருந்த ஜப்­பா­னிய பிர­தமர் சின்ஷோ அபேயும் கூட, ஐ.நாவுடன் ஒத்­து­ழைத்துச் செயற்­ப­டு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
ஆனால், இலங்­கையில் சர்­வ­தேச விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தற்கு, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை ஜப்பான் ஆத­ரித்­தி­ருக்­க­வில்லை.
உள்­நாட்டுப் பொறி­முறை மூலம் போர்க்­குற்ற விவ­கா­ரங்­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்று சில வாரங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்த இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர், ஐ.நாவின் விசா­ர­ணைக்குத் தேவை­யான தக­வல்­களை அர­சாங்கம் வழங்க வேண்டும் என்றும் கூறி­யி­ருந்தார்.
அதா­வது, சர்­வ­தேச சமூ­கத்­துடன் முரண்­பா­டு­களை வளர்த்துக் கொள்­வதை ஜப்பான் மட்­டு­மன்றி, இலங்­கைக்குத் துணை நிற்­கின்ற பல்­வேறு நாடு­களும் கூட விரும்­ப­வில்லை.
ஐ.நாவுடன் ஒத்­து­ழைத்துச் செயற்­பட வேண்டும் என்று ஜப்­பா­னியப் பிர­தமர் சின்ஷோ அபே வலி­யு­றுத்­திய போது, தான், ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ளரை இலங்­கைக்கு வரு­மாறு தாம் அழைத்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச.
அது­மட்­டு­மன்றி, புதிய ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் சையிட் அல் ஹூசே­னுக்கு, இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில், வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸினால், கடிதம் ஒன்றும் அனுப்­பி­ வைக்­கப்­பட்­டுள்­ளது.
அந்தக் கடி­தத்தில், நியூ­யோர்க்கில் நடக்­க­வுள்ள ஐ.நா பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில், அவரைச் சந்­திக்க விருப்பம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
எனினும், யார் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரை சந்­திக்­க­வுள்­ளது என்ற விபரம் வெளி­யி­ட­வில்லை.
ஏனென்றால், ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்­துக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவும், இம்­மாதம் செல்­ல­வுள்ளார்.
அவர் தான் சையிட் அல் ஹுசேனைச் சந்­திக்க விரும்­பு­கி­றாரா அல்­லது, வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிஸ் தான் அவரை சந்­திக்க விருப்பம் வெளி­யிட்­டுள்­ளாரா என்­பது தெளி­வா­க­வில்லை.
எவ்­வா­றா­யினும், புதிய ஆணை­யா­ள­ருடன் பேச்சு நடத்தி, அவரைத் தமது பக்கம் இழுப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது என்­பது மட்டும் உண்மை.
நவ­நீ­தம்­பிள்­ளையைப் போன்று, இவ­ரையும் எடுத்த எடுப்­பி­லேயே விமர்­சித்து ஒதுக்­கி­விட முடி­யாது.
அவ்­வா­றா­ன­தொரு முடிவை அர­சாங்கம் எடுப்­பது இப்­போ­தைக்கு தற்­கொ­லைக்கு ஒப்­பா­னது.
புதிய ஆணை­யாளர் வரும் 24ம் திகதி ஜெனீ­வாவில் சமர்ப்­பிக்­க­வுள்ள, விசா­ரணை பற்­றிய வாய் மூல அறிக்­கையும், அடுத்த மார்ச் மாதம் சமர்ப்­பிக்­க­வுள்ள இறுதி அறிக்­கையும், அர­சாங்கம் ஒரு­போதும், எற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. ஆனாலும், அதற்­கான முழுப் பழி­யையும், புதிய ஆணை­யாளர் மீது அர­சாங்­கத்­தினால் சுமத்தி விட முடி­யாது.
அதேவேளை, ஐ.நாவுடன் முரண்பட்டுக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் துடைப்பதற்கு, இலங்கை பொறுமை காத்தேயாக வேண்டிய நிலை உள்ளது.
தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு புதிய மனித உரிமை ஆணையாளர் மீது வெறுப்பு கோபம், நம்பிக்கையீனம் என்று எல்லாமே இருந்தாலும், அதை உடனடியாக வெளிப்படுத்த முடியாது.
பொறுமை காத்தேயாக வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது அதற்கான இன்னொரு சோதனை. ஏனென்றால், புதிய ஆணையாளர் சமர்ப்பிக்கும் விசாரணை அறிக்கை, சிங்கள தேசியவாத சக்திகளால், மோசமாக விமர்சிக்கப்படும் வாய்ப்புள்ள சூழலில், அரசாங்கம் மட்டும் மௌனமாக இருக்க முடியாது.
அதேவேளை, கண்டபடி வாயைத் திறந்து மாட்டிக் கொள்ளவும் முடியாது. இந்தவகையில், நவநீதம்பிள்ளை இருந்திருந்தாலே பரவாயில்லை என்று அரசாங்கம் ஒரு கட்டத்தில் சிந்தித்தால் கூட அது ஆச்சரியமானதல்ல.

ad

ad