புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்து விட்டனர் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான முதலாயம்
சிங் யாதவ் தனது மைன்புரி தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 பேர் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து 1 எம்.பி. தொகுதிக்கும், 11 சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (16ஆம் தேதி) நடந்தது. இதில் 11 சட்டமன்ற தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 8 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''உத்தரபிரதேச மக்கள் மதவாத சக்திகளுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளனர். அவர்கள் நல்லிணக்கும் மற்றும் சகோதரத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்காட்டியுள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத சக்திகள் வெறுப்பு பரப்பி உயரத்திற்கு செல்ல முயற்சித்தன. ஆனால் மக்கள் தங்களுடைய வாக்கை கொண்டு மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர். உத்தரபிரதேச அரசு வளர்ச்சியின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்த தேர்தலை அடுத்தும் அதே வழியில் சமாஜ்வாடி அரசு செயல்படும்'' என்றார்.

ad

ad