புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014

டேவிட் ஹெய்ன்சை கொன்றவர்களை வேட்டையாடுவோம்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்
 ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடிய ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
நடத்தி வருகிறது. இதனையடுத்து இதற்கு பழிவாங்கும் விதமாக, சிரியாவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க நிருபர்கள் இருவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்தனர்.

இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்த பிரிட்டனை மிரட்டும் வகையில் அந்நட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை தீவிரவாதிகள் தலையை துண்டித்துக் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வீடியோவின் இறுதியில் டேவிட் ஹெய்ன்ஸை கொலை செய்த கருப்பு உடையில் இருந்த தீவிரவாதி, அடுத்தது மற்றொரு பிரிட்டன் பிணை கைதியான ஆலன் ஹென்னிங்கை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளான்.

இதற்கிடையே இவ்விகாரம் தொடர்பாக பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஹெய்ன்ஸ் கொல்லப்பட்டது கொடூரமான சம்பவம் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் தீய செயல், கொலையாளிகளை நீதியின் முன்நிறுத்த பிரிட்டன் அதன் அனைத்து சக்திகளையும் கொண்டு செயல்படும். இதற்கு காரணமானவர்களை தேடி தண்டிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். என்று கேமரூன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டேவிட் கேமரூன் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad