புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014





""நாம பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும் நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''

""அதிகாரிகளாச்சே.. உண்மை விவரமும் நிலவரமும் அவங்களுக்குப் புரியுமே... அப்பாயிண்ட்மெண்ட், டிஸ்கஷன், முக்கியமான ஃபைல்களைப் பார்ப்பதுன்னு கோட்டையில் ஜெ. பிஸியாகத் தான் இருக்காரு. தீர்ப்பு குறித்த டென்ஷன் எதையும் செகரட்டரியேட்டில் பார்க்க முடியலை. ஆனா தமிழக நிலவரத்தை மத்திய உளவுத்துறையான ஐ.பி. உன்னிப்பா பார்த்துக்கிட்டுத்தான் இருக்குது. பழைய ஆட்களெல்லாம் எந்தவிதத்திலும் உதவி செய்யலைன்னு பெங்களூரு கேஸோட இறுதி விசாரணைக் கட்டம் சமயத்திலே அவங்களை ஜெ தரப்புவிரட்டிட்டு, உயரதிகாரிகள் மூலமாகவும் பிரபலமான வக்கீல்கள் மூலமாவும் முயற்சிகளைத் தொடர்வதைப் பற்றி உளவுத்துறை ஆட்கள் க்ளியரா ரிப்போர்ட் எடுத்திருக்காங்க.''

""முயற்சிகள் பற்றி அவங்க ரிப் போர்ட்டில் என்ன சொல்றாங்களாம்?''

""அது சம்பந்தமா வெளிப்படையா பேசலைன்னாலும் பூடகமா சில விஷயங்கள் வெளியே வருது. முதல்வரோட அரசாங்க ஆலோசகர் "5 நிமிடம் உங்க கிட்டே பேசணும்'னு குன்ஹாகிட்டே மூவ் பண்ணப்பட்டிருக்குது. ஆனா அவர்கிட்டே பாசிட்டிவ்வான பதில் கிடைக்கலையாம். 8-ந் தேதியன்னைக்கு ஏதாவது பாசிட்டிவ் சிக்னல் வரும்னு தான் கார்டன் தரப்பு எதிர்பார்ப்போடு இருந்ததாம். சட்டத்துறையோட தொடர்புடைய சில அரசியல் பவர் ஆசாமிகளும் ஜெ. தரப்புக்காக ரொம்ப மெனக்கெடுறாங்க. அதில் ஒருசிலர், நீதிபதி குன்ஹாகிட்டே பேசக்கூடிய நீதித்துறை ஆட்கள் மூலமா அப்ரோச் பண்ணிப்பார்த்திருக்காங்க. நீதிபதி எந்தப்பிடியும் கொடுக்கலையாம். அப்ரோச் பண்ணுனவங்ககிட்டே, அவங் களுக்குத்தான் சட்டம் நல்லா தெரிஞ் சிருக்குதே... ஹைகோர்ட்டில் பெட்டி ஷன் மேலே பெட்டிஷன் போடுறாங் களே... இது சம்பந்தமாகவும் ஹை கோர்ட்டிலேயே பார்த்துக்கச் சொல் லுங்கன்னு பதில் சொல்லப்பட்டிருக்குது. பெங்களூரிலிருந்து எதிர்பார்த்த பாசிட்டிவ் சிக்னல் எதுவும் வராததில் கார்டன் அப்செட்தானாம்.''

""முயற்சிகள் தொடர்ந்து கிட்டேதானே இருக்கும்?''

""அது ஒரு பக்கம் தொடருதுங்க தலைவரே... அதேநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட்னு ஜெ தரப்புக்காக பலமுறை நேரில் ஆஜராகி வாதாடியவர் பிரபல வக்கீல் கே.கே.வேணுகோபால். 2ஜி, நிலக்கரி கேஸ்களில் சி.பி.ஐ தரப்பில் ஆஜராகிறவரும் இவர்தான். பெங்களூரு கேஸில் ஜெ. தரப்பு வக்கீல்கள் நிறைய சட்ட ஆலோசனைகளை இவர்கிட்டே நடத்தியிருக்காங்க. பல மனுக்களைப் போட்டு கேஸை இத்தனை ஆண்டுகாலம் நீடிக்க வச்சதிலே வேணுகோபாலுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனா அவரே இப்ப ரொம்ப கவனமா இருக்கணும்னு ஒரு அ.தி.மு.க. எம்.பி.யிடம் சொல்லியனுப்பி யிருக்காரு. அதனால ஜெ.வும் வேணு கோபால்கிட்டே டிஸ்கஸ் பண்ணியிருக் காரு. தீர்ப்பு சாதகமாகவும் வரலாம். பாதகமாகவும் வரலாம். ஆனா, தீர்ப்பு தேதியன்னைக்கு கோர்ட்டில் ஆஜராக ணும். இனி இழுத்தடிக்கிறதோ, தேதியை மாற்றச்சொல்லி பெட்டிஷன் போடுறதோ நல்லதல்லன்னு சொன்னதோடு, முதல் வர்ங்கிற அந்தஸ்தை கோர்ட்டில் எதிர் பார்க்காதீங்கன்னும் வேணுகோபால் சொல்லியிருக்காராம். அதே நேரத்தில் ஜெ.வுக்கு நம்பிக்கையா சில வார்த்தை களையும் சொல்லியிருக்காராம்.''

""அதையும் சொல்லுப்பா!''

""தீர்ப்பு சாதகமா வரும். ஒருவேளை பாதகமா வந்தா உடனடியா தீர்ப்பையும் தண்டனையையும் நிறுத்தி வைக்க கர்நா டக ஹைகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட் டிலோ பெட்டிஷன் போட்டு இரண் டையுமே நிறுத்திவைக்க சட்ட வழிகள் இருக்குன்னு சொன்னதோடு, அதற்குத் தகுந்தபடி பெரிய வக்கீல் பட்டா ளத்தைப் பெங்களூருவிலும் டெல்லி யிலும் ரெடி பண்ணி வச்சிட்டாராம் வேணுகோபால். அதேநேரத்தில் அர சாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பவர் சென்டர்கள் மூலமாகவும் முயற்சிகள் நடந்துக்கிட்டிருக்குது.''

""அதுதான் ரொம்பகாலமா நடக்குதே... முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், கர்நாடக கவர்னரா இருந்தப்ப அவர் மூலமா அப்ரோச் நடந்தது. கவர்னர் தரப்பிலிருந்து பேசியும்கூட நீதிபதியை நெருங்க முடியலைன்னு அப்ப தகவல் வந்ததுப்பா.''

""இப்பவும் கவர்னர் உதவிக்கரம் தொடருது. பரத்வாஜ் போலவே நம்ம கவர்னர் ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்தான். ஆனாலும் ஜெ.விடம் நட்புறவோடு இருக்காரு. அந்த வகையில் கர்நாடக முதல்வரான சித்தராமையாகிட்டே இந்த கேஸ் பற்றி ரோசய்யா ஆலோசிச்சாராம். இரண்டுபேருமே காங்கிரஸ்காரங்க ளாச்சே! சித்தராமையா ரொம்பத் தெளிவா, நீதிபதி குன்ஹா எங்க மாநில அரசின் வரையறைக்குள்ளே இருந்தாலும் கோர்ட் விஷயங்களில் நாங்க தலையிடுற தில்லை. ஆனா டெல்லியிலிருந்து கட்சித்தலைமை சொன்னா இதைப் பற்றி யோசிக்கலாம்னு சொல்லியிருக்காரு. ரோசய்யாவும் டெல்லியில் இருக்கிற அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் இவங்க மூலமா சோனியாகாந்திகிட்டே விஷயத்தைக் கொண்டு போயிருக்காரு.''

""ஜெ. சம் பந்தப்பட்ட கேஸில் சோனியா எந் தளவுக்கு இன்ட் ரஸ்ட் காட்டினா ராம்?''

""ரோசய்யாதான் இந்த விஷயத்தில் ரொம்ப இன்ட்ரஸ்ட் காட்டுறாரு. தமிழ் நாட்டில் தி.மு.கவோடு கூட்டணி இல்லாத நிலையில் ஜெ.வுக்கு உதவி செய்து அ.தி.மு.க தரப்பைக் காங்கிரஸ் கவரலாமேங்கிற அளவுக்கு ராஜ்பவனிலிருந்து இன்ட்ரஸ்ட் காட்டப்பட்டிருக்குது. சோனியாவைப் பொறுத்தவரை, இந்த  கேஸோட பொஸிஷன் என்ன, அரசியல் தலையீடு சாத்தியமான்னு தெரிஞ்சிக்கிறதில் இன்ட்ரஸ்ட் காட்டுறாரு. அதனால இதைப் பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாகிட்டே கேட்டிருக்காரு.''

""அவர் என்ன சொன்னாராம்?''

""கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் காவிரி பிரச்சினை இருக்கிறதால கலைஞர் கருணாநிதியா இருந்தாலும் ஜெயலலிதாவா இருந்தாலும் அவங்களுக்கு சப்போர்ட்டா நாம் ஏதாவது மூவ் பண்ணினா இங்குள்ள மக்கள் நமக்கு எதிராகப் போயிடுவாங்க. காங்கிரசுக்கு கர்நாடகாவில் இருக்கிற செல்வாக்கை நாம இழக்கவேண்டியிருக்கும்னு சித்தராமையா சொல்லியிருக்காரு. சோனியா கிட்டேயிருந்து மேற்கொண்டு எந்த சிக்னலும் இல்லை. அதனால ரோசய்யா தரப்பு முயற்சிகளும் பிரேக் ஆகியிருக்குது. தீர்ப்பு பற்றி அவங்கவங்களோட ஊகங்கள்தான் வந்துகிட்டிருக்குது.''

""என்னவாம்?''

""செப்டம்பர் 20-ல் முழுமையான தீர்ப்பும் வரலாம், அல்லது நீதி பதியே கூடுதல் கால அவகாசம் கேட்கலாம், அதுவுமில்லாம மூல வழக்கின் தீர்ப்பை ஒத்தி வச்சிட்டு கூட்டு சதி-கம்பெனிகளை இணைத்தது சம்பந்தமான கேஸ்களின் தீர்ப்புகளை மட்டும் சொல்லலாம், இல்லைன்னா தீர்ப்பு பலமா இருந்தாலும் பதவிக்கு ஆபத்தில்லாத அளவுக்கு தண்டனை இருக்கும்னெல்லாம் பலவித ஊகங்கள்.''

   ""இத்தனை ஊகங்களுக்கும் காரணமா இருப்பது செப் டம்பர் 20-ந் தேதிதான். அந்த தீர்ப்பு தேதியை முடிவு செய்த நீதிபதி குன்ஹா இதை யெல்லாம் யோசிக்காமலா இருப்பாரு?''

""அவரோட யோசனையெல்லாம் தீர்ப்பிலே தான் முழுமையா இருக்குது. இதுதான்  பெங்களூ விலிருந்து எனக்கு கிடைச்ச தகவல். முக்கியமான பகுதியை ரெடி பண்ணிட்டாருன்னும் அது சம்பந்தமான கரெக்ஷன்களை ஸ்பெஷல் கோர்ட் டைப்பிஸ்ட் செய்துகிட்டிருக்காராம். ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாதுன்னு சொல்றாங்க. சம்பந்தப்பட்ட துறைகளுக்கான கடிதம், வாரண்ட்டுன்னு எல்லாவற்றையும் நீதிபதி சீரியஸா கவனிக்கிறாராம்.''

 லாஸ்ட் புல்லட்

முப்பெரும் விழாவில் திரண்டிருந்த தொண்டர் களைக் கண்ட உற்சாகத்துடன் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார் கலைஞர். விழாவில் துரை முருகன் பேசும்போது, சர் பிட்டி தியாகராயர் 1916ல் வெளி யிட்ட பிராமணரல்லாதார் அறிக்கைதான் திராவிட இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகக் கருதப்படுகிறது. 1916ல் வெளியிடப்பட்ட அந்த அறிக்கைக்கு 2016ல் நூற்றாண்டு. எனவே திராவிட இயக்கத் தின் நூற்றாண்டைக் கொண்டாடக்கூடிய வராக அதிகாரத்தில் இருக்கப்போகிறவர் கலைஞர்தான் என்றபோது அரங்கம் அதிர்ந்தது. அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின்பேசும்போது, துரைமுருகன் சொன்ன கருத்துகளை ஆதரித்து, 2016ல் கலைஞர் தலை மையில்தான் தேர்தலை சந்திப்போம் அவர் தலைமையில் ஆட்சி அமைப்போம் எனப் பேசினார். ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என அவரது தரப்பிலிருந்து குரல்கள் வெளிப்படும் நிலையில், கலைஞர் தலைமையில்தான் ஆட்சி என ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

ad

ad