புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

தலைகளை வீழ்த்தி புதியவர்கள் எழுந்தனர் 
 அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர்களாக திகழ்ந்தவர்கள் ஜோகோவிச், பெடரர். இவர்களை புதிய வீரர்களான  நிஷிகோரியும், மரின் சிலிச்சும் அவர்களுடன் போராடி சாய்த்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.

 
வரலாற்றில் நிஷிகோரி
4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் சுற்றின் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது.
 
முதலாவது அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரும் 2011–ம் ஆண்டு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் 
ஜோகோவிச்சும்  11–ம் நிலை வீரர் ஜப்பானின் கெய் நிஷிகோரியும் பலப்பரீட்சை நடத்தினர். இதில்  டென்னிஸ் 
உலகின் அபாயகரமான வீரராக வர்ணிக்கப்படும் ஜோகோவிச் கடுமையாக போராடிய போதிலும் நிஷிகோரியின்
ஆக்ரோஷத்துக்கு  முன்பு ‘சரண்’ அடைவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. 2 மணி 52 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் நிஷிகோரி 6–4, 1–6, 7–6 (4), 6–3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து முதல் முறையாக இறுதி
சுற்றுக்குள்அடியெடுத்து வைத்ததுடன் புதிய வரலாறும் படைத்தார். கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆசிய வீரர்  ஒருவர் இறுதிப்போட்டியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
 
அதேபோல இன்னொரு ஆட்டத்தில் பெடரரும் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.பெடரர் 5 முறை அமெரிக்க ஓபனை வென்றவரும் தரவரிசையில் 3–வது இடம் வகிப்பவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 16–ம் நிலை வீரர் குரோஷியாவின் மரின் சிலிச்சும் மோதினர். இதில் 17 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி பெடரரின்
சாமர்த்தியமான  ஆட்டத்தை ஓரங்கட்டிய மரின் சிலிச் 6–3, 6–4, 6–4 என்ற நேர் செட்டில் 1 மணி 45 நிமிடங்களில் வெற்றிக்கனியை பறித்தார். 13 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
 
பெடரரை சிலிச் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருடன் மோதிய 5 ஆட்டங்களிலும் அவர் தோல்வியையே சந்தித்து இருந்தார். அதே நேரத்தில் 2012–ம் ஆண்டுக்கு பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்ல 
முடியாமல் தவிக்கும் 33 வயதான பெடரருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
 
மும்மூர்த்திகள் இல்லாமல்...2007–ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று வரும் மரின் சிலிச் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
 
பெடரர், ஜோகோவிச் இருவரும் ஒரே நேரத்தில் மண்ணை கவ்வியது டென்னிஸ் ரசிகர்களை மிகுந்த 
அதிர்ச்சிக்குள்ளாக்கி  இருக்கிறது. அது மட்டுமின்றி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் சரித்திரத்தில் மிகவும் 
ஆச்சரியத்திற்குரிய ஒரு நாளாக இது பார்க்கப்படுகிறது. முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், ஜோகோவிச், ரபெல் நடால்
 (ஸ்பெயின்) ஆகிய மூன்று பேரில் ஒருவர் கூட இல்லாமல் கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டம் ஒன்று நடக்க இருப்பது
 2005–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
 
24 வயதான நிஷிகோரியும் 25 வயதான மரின் சிலிச்சும் தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக இன்றிரவு 
போராடுவார்கள் 

ad

ad