புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014


பிரேசில் கால்பந்து வீரர் பீலேவின் சுயசரிதைக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரேசிலின் பிரபல கால்பந்து வீரரான பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. ஹாலிவுட் பிரபலங்களான ஜெப்
சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள்.

கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பிபா உலகக் கோப்பை பிரேசிலில் நடைபெற்றபோதே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் நிறைவடையாததால் அப்போது வெளியிடப்பட முடியாத இந்தப் படம் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் திரைக்கு வரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு முறை கிராமி விருது வாங்கியுள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள அவர், பிரேசில் நாட்டின் திறமையான பாடலாசிரியரும், பாடகருமான ஆனா பியட்ரிசுடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது என்று அவர் தனது தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் ரஹ்மான், இந்த வருடம் 'ஹண்ட்ரட் புட் ஜர்னி', 'மில்லியன் டாலர் ஆர்ம்' என்ற இரண்டு ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad