புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது இந்தியில் உரையாற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தி திவாஸ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், அமெரிகாவில் இந்தியில் பேசிய
முதல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான். நான் ஒரு முறை அமைச்சராக இருந்த போது ஐ.நா.வில் இந்தியில் உரையாற்றினேன்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும்போது  இந்தியில் தான் பேசுகிறார். இந்தி மொழி எல்லோருக்கும் தாய் மொழி இல்லை. ஆனால் நாட்டில் இந்தி மொழி பேசுவோர் 55 சதவீதம் தான். ஆனால் நாட்டில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் மக்கள் இந்தி மொழியை பேசினால் புரிந்துகொள்கின்றனர்.

மகாத்மா காந்திஜி, கோபால ஸ்வாமி ஐங்கார், ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியவர்களின் தாய் மொழி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இந்தி மொழி நாட்டின் பொதுவான மொழி ஆகும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி. இந்தி மொழி அவற்றின் சகோதிரி மொழி.

பிரதமர் நரேந்திரமோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை பொதுக்கூட்டத்தில் செப்டம்பர் 27 தேதி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad