புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014




""ஹலோ தலைவரே.. … 2ஜி கேஸிலும் ஏர்செல்-மேக் ஸிஸ் கேஸிலும் விறுவிறுப்பு கூடிக்கிட்டே போகுதே?''

""ஆமாப்பா.. ..செப்டம்பர் 2-ந் தேதிக்குப்பிறகு பல திருப்பங்கள் இருக்கும்னு நம்ம நக்கீரன் ஏற்கனவே சொல்லி யிருந்தது. 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி கனிமொழி போட்டிருக்கிற பெட்டிஷன் 2-ந் தேதியன் னைக்கு சுப்ரீம்கோர்ட்டில் வந்தப்ப, 7 ட்ரங்க் பெட்டி களில் ஆவணங்களை சமர்ப் பிச்சிருக்காங்க. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகள் தகுதியே இல்லாதவைன்னு சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகை சொல்லியிருக்குது. சி.பி.ஐ. டைரக்டரோ அதெல்லாம் தகுதியுள்ள கம்பெனிகள் தான்னு சொல்லியிருக்காரு. சில டாக்குமெண்ட்டுகளை சமர்ப்பிக்கவேண்டாம்னும் அது கேஸை வீக் ஆக்கிடும் னும் சி.பி.ஐ.க்காக ஏற்கனவே ஆஜரான வக்கீல் லலித் குறிப் பும் எழுதியிருக்காராம். இதெல் லாம்தான் ட்ரங்க் பெட்டிகளில் இருந்திருக்குது. 2ஜி கேஸ் தொடர்பா சி.பி.ஐ.க்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருக் குதுன்னு சொல்லி, விசாரணை யை ஒத்திவைத்திருக்குது சுப்ரீம் கோர்ட்.''

""சி.பி.ஐ. டைரக்டர் ரஞ்சித் சின்ஹாவுக்கும் சர்ச்சைகளுக்கும் ரொம்ப ராசி போலிருக்குதுங்க தலைவரே.. .. 2ஜி கேஸில் சம் பந்தப்பட்ட கம்பெனிகளைச் சேர்ந்தவங்க ரஞ்சித் சின்காவை சந்திச்சிருக்கிறதாகவும் அதெல் லாம் அவர் வீட்டு செக்யூரிட்டி களிடம் உள்ள பதிவேட்டில் விவரமா இருப்பதா பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் சொல்ல அது இப்ப புது பூதாகரமாகியிருக்குது. அப்படியெல்லாம் பதிவேடே இல்லைன்னு ரஞ்சித் சின்ஹா சொல்றாரு. கோர்ட்டோ, பிரசாந்த் பூஷண் சொல்ற பதிவேட்டில் உள்ள விவரங்களை மீடியாக்கள் வெளியிடத் தடை யில்லைன்னும் ஆனா பொறுப்பா நடந்துக்கணும்னும் வியாழக் கிழமையன்னைக்கு உத்தரவிட் டது. 2ஜி கேஸில் போகப் போக இன்னும் என்னென்ன பூதங்கள் கிளம்பும்னு தெரியலை.''



""அதே பயம்தான் ஏர்செல்-மேக்ஸிஸ் கேஸில் சிக்கியிருக்கிற கலாநிதிக்கும் தயாநிதிக்கும் இருக்குதாம்ப்பா.''

""உண்மைதாங்க தலைவரே.. .. அதோடு சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட்டோட கல் கேபிள் நெட்வொர்க்கு மத்திய அரசு தடை போட்டிருப்பதால பெரியளவில் தொழில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதா பிசினஸ் வட் டாரங்களில் சொல்றாங்க. சன் டைரக்ட் நிறுவனத்தில் 40 லட் சம் கனெக்ஷன் இருக்குதாம். இதைவிட அதிகளவில் கனெக் ஷன் இருப்பது அனில் அம்பானி யோட ரிலையன்ஸில்தான். அதா வது, 60 லட்சம் கனெக்ஷன். சன் டைரக்ட்டோட ஒரு கனெக்ஷ னுக்கு சராசரியா மாசம் 300 ரூபாய்னு கணக்குப்போட்டால் 120 கோடி ரூபாய் வருமானம். இதை சொல்லித்தான் ரிலை யன்ஸ் நிறுவனத்துக்கிட்டே தன் னோட கனெக்ஷன்களையெல் லாம் எடுத்துக்கும்படி சொன்னது சன் நிறுவனம். ஆனா, தயாநிதி மாறன் மத்திய மந்திரியா இருந் தப்ப கொடுத்த டார்ச்சரை மனசிலே வச்சி அனில் அம்பானி வேண்டாம்னுட்டாரு. இப்ப உள் நாட்டு பாதுகாப்பு காரணங் களைக் காட்டி சன்னோட கேபிள் மற்றும் டி.டி.ஹெச். தொழிலுக்கு மத்திய அரசு தடை போட்டதும், சென்னை சிட்டியில் உள்ள கனெக்ஷனையெல்லாம் மாநில அரசுத் தரப்பில் கட் பண் ணிட்டாங்க. அதனால டாடா ஸ்கை அல்லது ஏர்டெல் நிறு வனத்தைத்தான் சன் குழுமம் நம்பியிருக்குது. ஏற்கனவே ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டிய விவகாரம் பெருசா பேசப்பட்டது. அத னால டாடாவும் தயங்குதாம்.'' 


""கேபிள் மற்றும் டி.டி. ஹெச்சால உள்நாட்டு பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல்னு விசாரிச்சேம்ப்பா. சன் டைரக்ட் நிறுவனத்தில் மலேசிய தொழி லதிபர் அனந்தகிருஷ்ணனோட 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்குது. அந்தப் பணம் எப்படி வந்ததுன்னு அவர் விசாரணையில் ஆஜராகி தெளிவுபடுத்தணும். அவர் இன்னும் விசாரணை வளையத் தில் சிக்காமல் இருந்ததால, மலேசியாவிலிருந்து வந்த பணமா இருக்கிறதால அது அனந்தகிருஷ்ணன் பணமா, தீவிரவாதிகளோட பணமாங் கிற டவுட்டில்தான் உள்நாட்டு பாதுகாப்புங்கிற காரணத்தைக் காட்டி உரிமத்தை ரத்து பண்ணியிருக்குது மத்திய அரசு. அனந்தகிருஷ்ணனோ இந்தியா வுக்கு வந்து விசாரணையில் கலந்துகிட்டா, அரெஸ்ட் பண் ணிடுவாங்கங்கிற பயத்திலே வரமாட்டேங்குறாரு. இது மாறன் சகோதரர்களுக்கு நெருக் கடியை உண்டாக்கியிருக்குது.''

""தலைவரே.. ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கைவிட, மத்திய அமைச்சரா இருந்த தயாநிதி மாறன் வீட்டில் அமைக்கப்பட்டி ருந்த மினி எக்ஸ்சேஞ்சை சன் டி.வி.யோட ஒளிபரப்புக்கு பயன் படுத்துன கேஸ்தான் ரொம்ப ஸ்ட்ராங்கானதுன்னு மாறன் சகோதரர்களே பயப்படுறாங்க. அரசாங்கத்துக்கு 400 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதா அந்த கேஸில் சொல்லப்பட்டி ருக்குது. சட்டப்படி, நட்டத் தொகை போல 20 மடங்குக்கு அபராதம் விதிக்கலாமாம். அதாவது, 8ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் போடமுடியும். அப்ப டிப் போட்டால், சன் குழுமத்து சொத்துகளை முடக்கிடுவாங் களோன்னு சகோதரர்கள் பயப் படுறாங்க. அவங்க பயப்படுறது போலவே ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரமும் பயத் திலேதான் இருக்காராம்.''

""அவருக்கு என்ன நெருக்கடி? காங்கிரஸ் கட்சி சார்பில் மேயர் வேட்பாளரா நிற்கச் சொல்லிட்டாங்களா?''

""அதில்லீங்க தலைவரே.. .. ஏர்செல்-மேக்ஸிஸ் கேஸோட குற்றப்பத்திரிகையில ரால்ஃப் மார்ஷல்ங்கிறவரோட பேரும் இருக்குது. இவர்தான் அனந்த கிருஷ்ணன் கம்பெனியில பவர் ஃபுல் ஆள். மலேசியாவில் உள்ள வங்களே அவரை பார்க்கிறது கஷ்டமாம். அப்படிப்பட்டவர் கிட்டே கார்த்தி சிதம்பரம் அடிக்கடி பேசியிருப்பது சி.பி.ஐ.யோட விசாரணையிலே தெரியவந்திருக் குது. வெளிநாட்டு நிறுவனம் இங்கே தொழில் தொடங்கும் போது அதில் இந்தியர்களோட முதலீடு குறிப்பிட்ட அளவில் இருக்கணும்ங்கிறது விதி. ஏர்செல்லை வெளிநாட்டுக்காரரான அனந்தகிருஷ்ணன் வாங்குனப்ப அதில் அப்பல்லோ ஆஸ்பிட்டல் குரூப்புக்கும் ஷேர் இருந்தது. ஏர்செல்லில் அப்பல்லோவுக்கு இருந்த பங்குங்கிறது கார்த்தி சிதம்பரத்தோட நேரடி பணமா அல்லது சன் டி.வி. கலாநிதி மாறனோட பணமான்னு சி.பி.ஐ. தீவிரமா விசாரிக்கிறதாலதான் கார்த்தி பதட்டத்திலே இருக்காராம்.''

""ஓ… அடுத்த மேட்டருக்குப் போகலாம்ப்பா. சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சதா சிவம் கேரள கவர்னரா நியமிக்கப் பட்டதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் வந்தபடியே இருக்குதே?''

""நாட்டோட முதல் குடிமகனான குடியரசுத்தலை வருக்கே பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தான். அதாவது ஜனாதிபதி, பிரதமர் இவங்களுக்கடுத்த உயர்ந்த பதவி. அப்படிப் பட்ட பொறுப்பில் இருந் தவர் ஒரு மாநிலத்துக்கு கவர் னரா போவது பொருத்த மானதில்லைன்னு நீதித்துறை வட்டாரத்திலிருந்து சிலர் சொல்றாங்க. தலைமை நீதி பதியா சதாசிவம் இருந்தப்ப அமித்ஷா மீதான ஒரு என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு சம்பந்தமான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்திருக்காரு. அந்த அமித்ஷாதான் இப்ப பா.ஜ.க. வோட தலைவர். சதாசிவம் கவர்னரா நியமிக்கப்பட்டது தொடர்பா இப்படியொரு அரசியல் சர்ச்சையும் கிளம்பியிருக்குது. சதா சிவமோ மக்கள் பணியாற்ற எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்பது தவறில்லைன் னும், கேரள கவர்னரா தான் பொறுப்பேற்பது சரிதான் னும் சொல்லியிருக்காரு. அதோடு, அமித்ஷா கேஸில் அந்த எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டாலும் கூடுதல் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்ய லாம்னு உத்தரவு போட்ட தாகவும் தன்னோட நிலை யை விளக்கியிருக்கிறாரு.''

""தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி இந்தியா வோட கவர்னர் ஜெனரலா இருந்துட்டு அதற்கப்புறம் சென்னை மாகாணத்தோட முதல்வரானாரு. அதே வழி யில் தலைமை நீதிபதியா இருந்த சதாசிவமும் மாநில கவர்னராகியிருக்காரு. சதாசிவம் கவர்னரா வாருன்னு முதலில் சொன் னது நம்ம நக்கீரன்தான். தமிழர்ங்கிற முறையில் அவரை வாழ்த்துவோம்.''

""சதாசிவம் கவர்னராவதற்கு ஜெ.வும் சிபாரிசு செய்திருந்தாரு. பொதுவா, எல்லாக் கட்சித்தலைவர் களோடும் சதாசிவம் நட் போடு இருப்பாரு. கலைஞர், சோனியா சைடிலும் அவருக்கு ஏற்கனவே சப்போர்ட் இருந்தது. இப்ப மோடி, அமித்ஷா சப் போர்ட் இருக்குது. அது தான் சர்ச்சைகளுக்கு நடு விலும் கவர்னர் பதவியை உறுதி செஞ்சிருக்குதாம். இதற் கிடையிலே, தமிழக அரசின் சிறப்பு ப்ளீடரா இருந்த சதாசிவத்தோட மனைவியின் தம்பியை அந்தப் பொறுப் பிலிருந்து தூக்கிவிட்டது ஜெ. அரசாங் கம். என்ன காரணம்னு யாருக்கும் தெரியலை.''

""சதாசிவத்துக்கு முன்னாடி கேரள கவர்னரா இருந்தவர் டெல்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித். காங் கிரஸ்காரரான இவரை பா.ஜ.க அரசு மாத்திடிச்சி. பதவியில்லைன்னாலும் கேரளாவிலேயே தோட்டத்தோடு கூடிய பங்களா வீட்டிலே செட்டிலாகணும்னு ஷீலாவுக்கு ஆசையாம். இதை அவரோட மகள் லத்திகா தன்னோட நண்பரான கேரள அமைச்சர் பாபுகிட்டே சொல்லியிருக்காரு. பாபுவோ, பதவி இல்லைன்னா என்ன 6 மாசத்தில் நீங்க எதிர்பார்க்கிறதை பரிசாத் தர்றோம். டெல்லிக்குப் போயிட்டு இங்கேயே திரும்பி வந்து செட்டில் ஆகுங்கன்னு சொல்லியிருக்காராம். சேட்டன்கள் கிட்டே பேசிக்கிட்டிருந்தப்ப சொன் னாங்கப்பா.''

""சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமா முதன்முதலில் புகார் கொடுத்தவர் சுப்ரமணியசாமிதான். அந்த கேஸ்தான் ஜெ.வை இந்தளவுக்கு டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்குது. ராஜ பக்சேவோட ஃப்ரெண்டான சுப்ர மணியசாமி, தமிழக மீனவர்கள் விவகாரத்தில் அடிக்கடி வாயை விடுறாரு. மீனவர்களெல்லாம் கொந்தளிச்சுப் போயிருக்காங்க. இதுசம்பந்தமா சாமியைக் கண்டிச்சி பிரதமருக்கு ஜெ. காரசாரமா லெட்டர் எழுதி யிருந்தாரு. இது பேப்பர்களில் வந்தது. அதே நேரத்தில் ஜெய லலிதா சம்பந்தமா மோடிக்கு சாமி யும் லெட்டர் எழுதியிருக்காராம். தீர்ப்பு தேதி அறிவித்த நாளில் சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜெ.வை சந்திச்சதையும், பெங்க ளூரிலே கேஸ் நடக்கும் நிலையில், தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் கர்நாடகாவுல ரவிசங்கர்பிரசாத் சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டதும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கு துன்னும் இது உங்க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும்னும் மோடிக்கு எழுதுன லெட்டரிலே சாமி குறிப்பிட்டிருக்காராம்.'' 


""ஈழ விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரங்களை பகடைக்காய்களா உருட்டிக் கிட்டிருக்காங்கப்பா.''

""டெசோ சார்பில் ராஜ பக்சேவுக்கு எதிராகவும் மத்திய அரசை வலியுறுத்தியும் கலைஞர் தலைமையிலே சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி நான் சொல்லட்டுமா? ஐ.நா. பொது அவையில் ராஜபக்சே பேச அனுமதிக்கக்கூடாது, போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனிதஉரிமை விசாரணைக்காக இந்தியாவுக்கு வருவோருக்கு விசா வழங்கணும், ஈழத்தில் மிச்சமிருக்கிற தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்க இந்தியா உதவணும்ங்கிறதை வலியுறுத்திதான் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மோடி அரசு மேலே எல் லோரும் வச்சிருக்கிற நம்பிக்கையை, தானும் வச்சிருப்பதாகவும் அந்த நம்பிக்கையை மோடி காப்பாற்ற ணும்னும் கலைஞர் பேசினாரு. ரொம்ப வேகம் காட்டலை. உள் ளாட்சித் தேர்தலில் மத்தியில் ஆட்சியில இருக்கிறவங்களும் மாநி லத்திலே ஆட்சியிலே இருக்கிறவங் களும் மோதுற நேரத்தில், சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லா வற்றையும் தி.மு.க தலைமையிலான ஒரே அணியா கொண்டு வர்றதுக்கு கலைஞர் காய் நகர்த்துறாரோன்னு மற்ற கட்சித் தலைவர்களெல்லாம் பேசிக்கிறாங்க.''


 மந்திரி தந்த பணம்!

உள்ளாட்சி இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான செப்டம்பர் 4 அன்று புதுக்கோட்டை நகராட்சி சேர்மனுக்காக மனுதாக்கல் செய்ய பா.ஜ.க., சி.பி.எம். மற்றும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் தயாராக வந்தனர். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் 300 பேர் வரிசையில் நின்றுகொண்டு, "நாங்களெல்லாம் வேட்புமனுதாக்கல் செய்யப்போகிறோம். அதன்பிறகு நீங்கள் தாக்கல் செய்யுங்கள்' என்று நேரத்தைக் கடத்தச் செய்தனர். சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருக்க, தலைக்கு ஒரு லட்சம் எனப் பேரம் பேசியது மந்திரி விஜயபாஸ்கர் தரப்பு. இதுபற்றி உரிய அதிகாரிகளிடம் முறையிடவும் வாய்ப்பில்லாமல் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரின் அறைகள் மூடிக்கிடந்தன. நேரம் முடியும்வரை பா.ஜ.க., சி.பி.எம். தரப்பால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியவேயில்லை. அ.தி.மு.க வேட்பாளர் ராஜசேகர்  போட்டியின்றி வெற்றிபெறவேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னதால்தான் இந்த டெக்னிக்காம். ஜனநாயகமே இல்லை எனப் புலம்பியபடி சாலை மறியலில் எதிர்க்கட்சியினர் இறங்க, படம் எடுக்க வந்த செய்தியாளர்களை மிரட்டி விரட்டினர் ஆளுங்கட்சியினர். பணம் கொடுத்து மந்திரி தரப்பின் பிடியிலிருந்து தப்பி திருச்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் அங்கு போலீஸ் கமிஷனரிடம், “"எங்கள் வேட்பாளர் பாலகிருஷ்ணன் மனுதாக்கல் செய்யக்கூடாது என மந்திரி விஜயபாஸ்கர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார்' என பணக்கட்டுடன் புகார் தெரிவித்தார். திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் வாங்கத் தயங்கியதால் இரவோடு இரவாக சென்னை நோக்கிப் புறப்பட்டார் கருணாகரன். மந்திரி விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் செப்டம்பர் 4-ந் தேதி இரவே வெற்றிக்கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.

ad

ad