புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014





ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்...

சென்னை நுங்கம் பாக்கம் புஷ்பா நகரில் தீப்பற்றி சாம்பலான நூற்றுக் கும் மேற்பட்ட குடிசைகளின் சொந்தக்காரர்களைச் சந்தித்த, மேயர் சைதை துரைசாமியும் குடிசை மாற்று வாரிய அதிகாரி களும் ""இன்னும் 15 நாட் களுக்குள் தீப்பிடிக்காத வீடுகளை கட்டித் தருவோம்'' என்று உறுதியளித்தார்கள். மூன்று மாதமாகியும் எந்த வேலையும் நடக்கவில்லை.நன்றி  நக்கீரன் 

மேயர் மற்றும் வாரிய அதிகாரி களின் உறுதிமொழி நிறைவேற்றப் படாததற்குக் காரணமென்ன?

""எரிஞ்சது 100 குடிசைகள்தான். 200 எரியா வீடுகளைக் கட்டுங்க. 100 வீடுகளை நாங்க சொல்றவங்களுக்கு அலாட் செய்யுங்கள்னு லோக்கல் ர.ர.க்கள் அடம்பிடிச்சு மிரட்டுறாங்க. அதான் டிலே...!'' என்றார் வாரிய அதிகாரி ஒருவர். மந்திரி வளர்மதியோ பாதிக்கப் பட்டவர்களை சந்திக்கவே மறுக்கிறாராம்.

இதற்குப் பெயர்தான் எரிஞ்ச வீட்ல புடுங்கிறவரை லாபங்கிறதோ?

-இளையசெல்வன்

இடது கண்ணு மேஞ்சதப்பா இன்னொருத்தி மேலே?

திருச்சி மேற்கு எம்.எல்.ஏ. பரஞ்சோதியிடமிருந்த அமைச்சர் பதவியையும், திருவரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியையும் பறித்தது, அவர்மீது அரசு மருத்துவர் ராணி கொடுத்த பாலியல் மற்றும் மோசடிப் புகார்தான். உயர்நீதிமன்ற உத்தரவுப் படி இன்னும் ஒரு மாதத்தில் பரஞ் சோதி மீது போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் போகிறது. இந்த நிலையில்தான் பரஞ்சோதிக்கு பாரதி தாசன் பல்கலையில் செனட் உறுப் பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ""இதற்கு என்ன அர்த்தம்? ஒரு குற்றவாளிக்கு அரசாங்கம் சப்போர்ட் செய்கிறது என்று அர்த்தமா?'' கேள்வி கேட்டு, ஆளுநருக்கு கடிதம் எழுதி யிருக்கிறார் மருத்துவர் ராணி.

-ஜெ.டி.ஆர்.


இருதயப் பேச்சைக் கேட்பாயா?

ஈரோடு சி.எஸ்.ஐ. மேனி லைப்பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினிகளை 28.8.14 அன்று மாண்புமிகு தோப்பு வெங்கடாசலம் வழங்குவார் என ஏற்கனவே விளம்பரங்கள் ஆரவார வெளிச்சமிட்டிருந்தன. விலையில்லா மடிக்கணினி வாங்க வந்தோரில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பெயர் பயனாளிகள் பட்டியலில் இல்லை. 

அந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சரை முற்றுகையிடப் போகிறோம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு காத்திருந்தனர். அடுத்த நிமிடமே இந்த "முற்றுகை' திட்டம் அமைச்சர் தரப்பிற்குப் பாஸானது. 10 நிமிடத்         தில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீஸ் படை வந்து இறங்கியது. ""வாங்க வாங்க... யார் யார் பெயர் பட்டியலில் இல்லையோ அவங்க எல்லாருமே வாங்க! நாங்க கொடுக்க ஏற்பாடு பண்றோம்!'' இனிப்பாகப் பேசி அந்த மாண வர்களை அழைத்துச் சென்று, தொலைவில் ஒரு ஓரமாக அமர்த்தி ""தேவையில்லாம காச்மூச்சுனு சத்தம் வந்தால் அப்புறம் எல்லாருக்கும் 15 நாள் ரிமாண்ட்தான்'' என்றளவுக்கு மிரட்டி அமர வைத்து, அமைச்சர் வந்து பத்திருவது பேருக்கு மடிக்கணினி கொடுத்து விட்டுப் போனபிறகு அந்த மாணவர்களுக்கு விடுதலை அளித் துள்ளனர்.

-ஜீவா

உன் ஒருமுகம் உலகமாய் தோணுதே!

வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது, சேலத்தில் வசிக்கும் மகள் நிர்மலா ""அப்பா... சொந்தம் விட்டுப்போகக்கூடாது. தம்பி ராஜாவோட பொண்ணை என் பைய னுக்கு கட்டிவைங்கப்பா'' என்றார். 

""என் உயிர் நண்பன் ஜெயக்குமார், மரணத்தருவாயில் என் கையைப் பிடிச்சிக்கிட்டு "என் பையனுக்கு உன் பொண்ணைக் குடுடா'ன்னு கேட்டான். சரின்னு வாக்கு கொடுத்துவிட்டேன். அந்த சத்தியத்தை மீற முடியாது'' அப்போது அப்பாவிடமும் அக்காவிடமும் சொன் னார் ராஜா. வருடங்கள் ஓடின... ஆனாலும் வாக்கு மாறவில்லை ராஜா.

சேலம் வி.எஸ்.ஏ. கல்லூரியில் நடந்த ஜெ.ஜெயரத்னா- ஆ.இரா. கிருத்திகா திருமண நிச்சயதார்த் தத்தில் பத்தாயிரத்திற்கும் மேலோர் கலந்துகொண்டனர்.

""மெடிக்கல் 4-வது வருடம் பயிலும் கிருத்திகாவின் படிப்பு முடிந்ததும் தலைவர் கலைஞர், தளபதி தலைமையில் கல்யாணம்'' என்கிறார்கள் வீரபாண்டி ராஜா தரப்பினர்.

-சே.த.இளங்கோவன்


போதும் இந்தச் சின்னக் கனவு!

விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன்.

விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடுமென எழுந்த நன்னிலம் சேர்மன் சம்பத் ""எப்பவும் குற்றம் குறையை மட்டும்தான் சொல்லுவீங்களா? நல்லதே உங்க கண்ணுக்குத் தெரியாதா?'' என்றார் கோபமாக.

உடனே விவசாய சங்கத் தலைவர் நன்னிலம் சேதுராமன் ""போன வரு­ம், ஜெயலலிதாவைப் புகழ்ந்து நாங்க பேசினோமே! நல்லது செய்தால் பாராட்டுவோம். புகழ்ந்து பேசுவோம். ஆனால் இப்ப வாய்க் கால்கள் எல்லாம் வெட்டாமல் கிடக்கே... எப்படி பாராட்டுவது?'' என்று கேட்டார். இதைத் தொடர்ந்து தான் குறைதீர்ப்புக் கூட்டம் கோபக் குமுறல் கூட்டமாக, சட்டமன்றக் கூட்டம் போலானது. கலெக்டரோ, யாரையும் ஒழுங்குபடுத்தாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். ""விவசாயிகள் கூட்டத்தில் பிரச்சினையை உண்டாக்குவதற்காகவே இரண்டு சேர்மன்கள் தலைமையில் 10 அ.தி.மு.க.வினரை அனுப்பி வைத் திருக்கிறார் அமைச்சர் காமராஜ். தெரிந்தும் வேடிக்கை பார்க்கிறார் கலெக்டர்!'' பரிதாபமாக சொல்லி விட்டுப் போனார்கள் விவசாயிகள்.

ad

ad