புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

மு.க.அழகிரிக்கு திமுகவில் மீண்டும் முக்கியப் பதவி? 
திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் சேர்க்கப்பட்டு அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் அழகிரி ஆதரவாளர்களாக இருந்த பலரும் ஸ்டாலின் பக்கம் சாய்ந்துள்ள நிலையில் தற்போது மதுரை முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனும் ஸ்டாலினை சந்தித்து அவர் பக்கம் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அழகிரி வட்டாரத்தில், ஸ்டாலின் பக்கம் தாவுவதற்கு மிசா பாண்டியன் ஒரு மாதம் முன்பே முடிவெடுத்து விட்டார்.
இந்நிலையில், தலைமையிடம் விளக்கக் கடிதம் கொடுக்கப் போன மிசா பாண்டியனை தலைவர் சந்திக்காமல், அழகிரியை வைத்து சம்பாத்தியம் பண்ணியவர்களை எல்லாம் நான் பார்க்க தயாரில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த விடயத்தை நாங்கள் அழகிரியிடம் தெரிவித்தபோது, மிசா ஒரு கோமாளி, அவர் ஏற்கெனவே அதிமுகவுக்கு தாவியவர் தானே என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மிசா பாண்டியன் கூறுகையில், நான் தலைவரை நேரில் சந்தித்து எனது விளக்கக் கடிதத்தைக் கொடுத்தேன் என்றும் அழகிரிக்கு சில சங்கடங்கள் இருப்பதுபோல எனக்கும் சில சங்கடங்கள் இருக்கின்றன.
எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது, அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு செல்வி தரப்பில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்கின்றனர்.
உட்கட்சி தேர்தல்கள் நடக்கும் சமயத்தில் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் தேவையற்ற சர்ச்சைகள் வரலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தேர்தல்கள் முடிந்ததும் அழகிரியை கட்சியில் சேர்த்து அவருக்கு தலைமைக் கழகத்தில் முக்கியப் பொறுப்பு வழங்க முடிவெடுத்திருக்கிறது தலைமை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad