புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 15 நாட்கள்! (மினி தொடர்: பகுதி-2)
சென்றார் முடிகவுடர்... வந்தார் குன்ஹா!

2004 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதிதான் முடிகவுடர்.

நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடைய முதல் விசாரணையிலேயே, ''இது என்னுடைய நீதிமன்றம். இனி
ஒவ்வொரு வாய்தாவுக்கும் வழக்கின் நான்கு குற்றவாளிகளும் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) ஆஜராக வேண்டும்" என்று கண்டிப்பு காட்டினார் முடிகவுடர். அதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜெயலலிதா தரப்பு, ‘கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஒரு நாள் விலக்கு அளித்தது. அதை அடுத்து அக்டோபர் 30 ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

இந்நிலையில், 31.10.2013 ஆம் தேதி மாலையே வழக்கின் 8வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

நவம்பர் 21 ஆம் தேதி... புதிய நீதிபதியான ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘‘யார் அரசு வழக்கறிஞர்?’’ என அவர் கேட்டார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல்நிலை சரியில்லாததால் அன்று வரவில்லை. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டவர், ‘‘இந்த வழக்கைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்’’ என்று ஜெ. தரப்பைப் பார்த்து நீதிபதி கேட்டார்.

ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார் எழுந்து, ‘‘1991 முதல் 1996 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சொத்து குவித்ததாக 1997 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அவர்களால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4 (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) உடையது என்றும், ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் கம்பனியுடைய சொத்துக்களும் ஏ1 உடையது என்றும் கட்டட மதிப்பீட்டிலும் குளறுபடிகள் இருக்கிறது’’ என்றதும் குறுக்கிட்ட நீதிபதி, ‘‘எல்லா வழக்குகளிலும் குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அதைக் களைவது நம்முடைய பொறுப்பு’’ என்றார் சிரித்துக்கொண்டே. ‘‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் போடப்பட்டுள்ளது’’ என்று சொன்னதோடு, தங்களுடைய தரப்பினர் ஆஜர் ஆகாததற்காக மனுவையும் கொடுத்தார்கள்.

தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளான தங்க, வைர ஆபரணங்களை இங்கு கொண்டுவர வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட குன்ஹா, ‘‘யாரும் எமோஷனல் ஆக வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

டிசம்பர் 6 ஆம் தேதி... வழக்கு விசாரணைக்கு வந்தபோது அன்பழகன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ‘‘ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளை முறைப்படி இங்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்கள். குமார் தலைமையிலான ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘ஏற்கெனவே அவை நீதிமன்ற காவலில்தான் இருக்கின்றன. அவற்றை கொண்டுவரத் தேவையில்லை. இதை வைத்து தி.மு.க அரசியல் ஆதாயம் தேடுகிறது’’என்றனர்.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும், ‘ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளைக் கொண்டுவர வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்தார். இதையெல்லாம் அமைதியாக உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி, ‘‘தீர்ப்பை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’’ என்றார்.

டிசம்பர் 12 ஆம் தேதி... அசையும் சொத்துக்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவது குறித்து தீர்ப்பு வழக்கிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பாராமுகமாக இருந்துவிட்டார். இந்தச் சொத்துகள் அனைத்தும் இந்த வழக்கின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. அதைப் பார்த்து தீர்ப்பு வழக்குவதுதான் முறையாக இருக்கும். அதுதான் சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும். 21 ஆம் தேதிக்கு வாய்தா போடுகிறேன்’’ என்றார்.

ad

ad