புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014


ஐ படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் அர்னால்டு
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு
அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று ஐ படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளார்.

இதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அவர், இன்று மதியம் 2.45 மணிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை

ad

ad