புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவுஇலங்கையின் முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி செய்த ஆறு பேர் உள்ளிட்ட எட்டு பேருக்கு இண்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த சாலிய மெண்டிஸ் லியனகே வசந்த மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த சாலிய பெரேரா ஆகியோரே இவ்வாறு போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மெண்டிஸ் லியனகே என்பவருக்கு தாய் மொழி சரளமாக பேசக்கூடிய ஆற்றல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் ஆறு முஸ்லிம்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ad

ad